Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


நெகிழ்ச்சியுற வைத்த ஒரு திருமண வரவேற்பு !!

நேற்று என்னுடைய நீண்ட நாள் நண்பர் மகளின் திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். நண்பரின் பெயர் வெங்கட். இவர் வள்ளலார் அருளிய சன்மார்க்கத்தை பெரிதும் போற்றுபவர். சன்மார்க்க அடிப்படையில் தான் இவர் எனக்கு நண்பரானார். பத்து ஆண்டுகள் கழித்தே நான் அவரை சந்தித்தேன். சிறந்த வள்ளலார் பற்றாளரான இவர் கடின உழைப்பால் முன்னேறியவர். பல கோடிகள் புரளும் தொழில் அதிபராக இன்று விளங்குகிறார். 

மகளின் திருமணம் வள்ளலார் சித்தி அடைந்த மேட்டுக்குப்பத்தில் பல்லாயிரம் மக்களுக்கு அன்னதானம் வழங்கி நடத்தினார். திருமண வரவேற்பை மிகப் பிரமாண்டமான முறையில் சென்னையில் உள்ள மிகப்பெரிய திருமண மண்டபத்தில் நடத்தினார். இந்த திருமண வரவேற்பில் மிகவும் ஏழையான சன்மார்க்க அன்பர்கள் ஒரு புறம் கலந்து கொள்ள மறுபுறம் மிகவும் பணம் படைத்த பணக்காரர்களும் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஒரு நாள் முழுவதும் திருமண அரங்கத்தில் திருவருட்பா ஓதப்பட்டது. திருவருட்பா இசைக் கச்சேரியும், திருவருட்பா நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் திருவருட்பா நூல்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாக வழங்கப்பட்டது. 

வள்ளலார் எழுதிய திருவருட்பா ஆறாயிரம் பாடல்களையும் ஒரே நூலாக தொகுத்து ஒரு பெரிய நூலாக தனது சொந்த செலவில் வெளியிட்டார் நம் நண்பர். இந்த நூலின் பதிப்பு விலை 1000 ரூபாய். இருப்பினும் திருமண வரவேற்பின் போது இந்த நூலை வந்திருந்த நூற்றுக்கணக்கான சன்மார்க்க அன்பர்களுக்கு இலவசமாக வழங்கினார். வடலூரில் இந்த நூலை மலிவு விலையில் 250 ரூபாய்க்கு ஆயிரக்கணக்கில் விற்பனை செய்து பலரும் பயனடையும்படி செய்தார். தனது வருமானத்தில் பெரும்பங்கு அன்னதானம் வழங்குதல், ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு உதவுதல், சன்மார்க்க நூலகம் அமைத்தல், அரங்கம் கட்டுதல், அருட்பா நூல்களை வெளியிடுதல் என செலவு செய்து வருகிறார் இந்த அன்பர். வள்ளலார் காட்டிய சமரச சன்மார்க்க அன்பு வழியில் இவ்வுலகம் பயணிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இவர் இன்றளவும் செயல்பட்டு வருவது நம்மை நெகிழ்ச்சியுற செய்தது. மேலும் இந்த திருமண வரவேற்பில் பல நூறு கண்பார்வையற்ற நபர்களும், அனாதை குழந்தைகளும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருந்தது. வள்ளலார் பற்றி அறியாத பல்லாயிரம் மக்களுக்கு வள்ளலார் உலகிற்கு வழங்கிய செய்தியை இந்த திருமண வரவேற்பின் மூலமாக கொண்டு சேர்த்தார் நம் நண்பர். 

இதைப் பற்றி ஏன் கூறுகிறேன் என்றால், இது போன்ற திருமணம் முதலிய நிகழ்சிகளில் தமிழர்கள் அறம் சார்ந்த நூல்களை, செய்திகளை  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நம் நம்பர் வெங்கட் அவர்களைப் போல சிலருக்கு வசதிகள் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரவர் சக்திக்கு தக்கவாறு, தமிழர்களின் அறம் சார்ந்த திருக்குறள், திருவருட்பா, சங்க இலக்கிய நீதி நூல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கு நாம் வலு சேர்க்க வேண்டும். நாம் தேவையற்ற வகையில் பணத்தை செலவு செய்கிறோம். ஆனால் உண்மையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய செய்திகளுக்கு பணத்தை நாம் செலவு செய்வதில்லை. மக்களிடம் நல்ல கருத்துக்களை விதைத்து நல்ல எண்ணம் கொண்ட சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அதற்காகவேனும் நாம் இது போன்ற இல்ல நிகழ்வுகளை பயனுள்ளதாக மாற்றுவோம்.  இவ்வளவு பெரிய சிறப்பான செயலை செய்து முடித்த நண்பருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். 


தமிழ் மக்கள் நீதிப் பேரணி.  ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 
மாபெரும் தமிழர் பேரணி . அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு. 

கோரிக்கைகள் வருமாறு : 

௧. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ. நா மன்றத்தில் பேச அனுமதிக்காதே ! 

௨. இந்திய அரசே ! ஐ . நா மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடு. 

௩. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து ! தமிழர் கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டுக் கொடு ! 

௪. இலங்கை தமிழ் அகதிகளுக்கான  சிறப்பு முகாம்களை இழுத்து மூடு ! அவர்களுக்கு  இரட்டை குடியுரிமை வழங்கு ! 

௫. தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப் பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்திய அரசே முழுமையாக செயல்படுத்து ! 

மேற்கொண்ட தமிழர் வாழ்வுரிமைக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழர்கள் நாம் சென்னையில் ஒன்று கூடுவோம். வென்றெடுப்போம் ! 
 
செப்டெம்பர் 24 புதன் கிழமை, மாலை 3 மணிக்கு


  


.  

[vuukle-powerbar-top]

Recent Post