Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை என்பது திட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில் அவருக்கு பிறகு யார் தமிழக முதல்வர் என்ற கேள்வி எழுத்துள்ளது.

யார் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர் ஒரு பொம்மை முதல்வாராகத் தான் செயல்பட முடியும் என்றாலும் அந்தப் பதவியில் தமிழினத்திற்கு எதிரான ஒருவர் நியமிக்கப்படுத்தல் கூடாது என்பதில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். சென்ற முறை பன்னீர் செல்வம் பொம்மை முதல்வாராக செயல்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இம்முறை ஜெயலிதாவுடன் நெருக்கமாக இருக்கும் மலையாளியான சீலா பாலகிருஷ்ணன் முதல்வர் பதவியில் அமர்த்தப்படலாம் என்ற செய்தியும் வந்துள்ளது. அப்படி ஒருவர் தமிழக முதல்வராக வருவதை தமிழர்கள் நாம் வரவேற்க முடியாது.இனி யார் முதல்வராக வந்தாலும் தமிழினத்தை சேர்ந்த ஒருவரே முதல்வர் பதவியில் அமர்த்தப்படுதல் வேண்டும்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் அவசியம். தமிழினத்தை சேர்ந்த ஒருவரும் அதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரையே முதல்வர் பதவியில் அதிமுக அரசு அமர்த்த வேண்டும் என்று தமிழர்கள் சார்பில் நாம் கோரிக்கை வைக்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post