Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினத்தை ஒரு மலையாளி ஒரு போதும் ஆளக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக நின்றனர். அதன் எதிரொலியாக பன்னீர் செல்வம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.  பன்னீர் செல்வம் ஒரு பொம்மை முதல்வராக செயல்பட்டாலும் உண்மையில் அவர் ஒரு நல்ல தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். வேற்றின மக்களிடம் ஆட்சி அதிகாரம் செல்லாமல் ஒரு தமிழரிடம் ஆட்சிப் பொறுப்பு வந்ததில் மகிழ்ச்சி. புதிய முதல்வருக்கு நம் வாழ்த்துகள். 

அடுத்தது, ஜெயாவின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழினத்திற்கு எதிரான கொள்கைகள் பல ஜெயலலிதா வைத்திருந்தாலும் தமிழர் நாட்டின் உரிமைகளை இந்திய அரசிடம் எளிதில் அவர் விட்டுக் கொடுக்க வில்லை. இந்திய அரசின் தொடர் தொல்லைகளுக்கு அவர் எதிர் வினை ஆற்றிக் கொண்டே இருந்தார். பாஜக அரசும் தொடர்ந்து தமிழினத்திற்கு பல துன்பங்களை கொடுத்துக் கொண்டே வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசை எதிர்க்கும் ஒரு வலுவான முதல்வர் நமக்கு தேவைப்படுகிறார். இல்லையெனில் நம் மொழியையும், நம் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக பாஜக அரசு அழித்துவிடும் அபாயம் உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்காத மன உறுதியை புதிய முதல்வர் பன்னீர் செல்வம் கொண்டிருக்க வேண்டும். வரும் நாட்களில் தமிழகத்திற்கு பெரிய சவால்கள் காத்திருக்கிறது, அடுத்த தேர்தல் வரும்வரை பன்னீர் செல்வம் தமிழர் நாட்டை பாதுகாக்க விழிப்புடன் செயல்படுதல் வேண்டும். அவருக்கு தமிழின  மக்களும் துணை இருப்பார்கள். 

2016 தேர்தலில் தமிழினத்திற்கு ஆதரவான சக்திகளும், தமிழ்த் தேசிய சக்திகளும், திராவிட அரசியலை எதிர்க்கும் சக்திகளும் ஒன்றிணைந்து தமிழின விரோத கட்சிகளையும், இந்திய தேசிய கட்சிகளை தமிழ் மண்ணில் இருந்து துரத்தி அடிக்க வேண்டும். அதற்கான வேலைகளை இப்போதே தமிழர்கள் நாம் தொடங்குவோம். தமிழினம் காக்க  ஒற்றுமையுடன் செயல்படுவோம் . 
[vuukle-powerbar-top]

Recent Post