Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தான் கூறியது தவறில்லை! மேலும் நஞ்சை கக்கும் பொன். இராதா கிருஷ்ணன் !

இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைந்திருக்காது என்று பாஜக அமைச்சர் பொன்னார் கருத்து கூறியிருந்தார். இக்கருத்துக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதில் அளித்து பேசிய பொன்னார் தான் சொன்னதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை மதத்தவர்களும்  நூறு விழுக்காடு ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்காது. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்திருக்காது. குமை மாவட்டமும் மொழி ரீதியாகவோ மத ரீதியாகவோ கேரளாவில் இருந்து பிரித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது . பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தான் கூறிய கருத்து சரி தான் என்றும் பொன்னார் கூறியுள்ளார்.

இந்திய ஒன்றியத்தில் பல மொழி வழி தேசிய இனங்கள் வாழ்கின்றன. அந்தந்த தேசிய இனங்களின் பண்பாட்டையும், மொழியையும், மக்களையும் பாதுகாக்க உருவாக்கப் பட்டது தான் மொழி வழி மாநிலங்கள். தேசிய இனங்கள் என்பது இயற்கையாக உருவானது. இந்திய ஒன்றியம் போல கட்டாயப்படுத்தி உருவானது அல்ல தேசிய இனங்கள் . அத்தகைய தேசிய இனங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளான பண்பாட்டு உரிமை, மொழி உரிமை , மண் உரிமை போன்ற உரிமைகளை இது வரை இந்திய அரசு தர மறுக்கிறது . மொழி வழி மாநிலங்கள் உருவான பின்னரும் தேசிய இனங்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் மீது இந்தி, சமஸ்கிருதம் , ஆரியப் பண்பாடுகள் போன்ற திணிப்புகள் நடந்து வருகிறது. இதை தடுக்க பொன்னார் போன்றவர்கள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் மொழி வழி மாநிலங்கள் உருவாகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொன்னார் கூறுவது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் ஒரே மதத்தை , ஒரே பண்பாட்டை , ஒரே மொழியை ஏற்று வாழ வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது . இது தான் ஆர். எஸ் எஸ் இயக்கத்தின் அடிப்படை கொள்கை . இந்த கொள்கையில் நின்று தான் பொன்னார் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது தெளிவாகி உள்ளது. மொழி வழி மாநிலம் பிரிய வேண்டாம் என்றால் ஒரே மதத்தை சேர்ந்த வங்காள தேசமும் பாகிஸ்தானும் மொழி ரீதியாகத் தான் பிரிந்தது என்பது பொன்னாருக்கு ஏன் தெரியாமல் போனது.

தொடர்ந்து தேசிய இன அடையாளத்தை , மொழி பண்பாட்டு அடையாளத்தை மறுத்து வரும் பொன்னாரும் அவர் சார்ந்த பாஜக கட்சியினரும் இனி வரும் காலங்களில் தமிழ் மண்ணில் அரசியல் செய்ய முடியாத நிலையை தமிழர்கள் நாம் உருவாக்கிக் காட்டுவோம்.



[vuukle-powerbar-top]

Recent Post