Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீன அதிபரை சீன மொழியில் வரவேற்ற சுஷ்மா சுவராஜ். மகிழ்ச்சி அடைந்த சீன அதிபர்!

ஒவ்வொரு தேசிய இன மக்களுக்கும் அவரவர் மொழியில் பேசினால் மட்டுமே அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அதனால் சீன அதிபரை மகிழ்விக்க சீன மொழியில் சுஷ்மா சுவராஜ் பேசியது வரவேற்கத்தக்கது.

ஆனால் இந்தியாவில் வாழும் தமிழர்களிடமும் இந்தி அல்லாத பல கோடி தேசிய இன மக்களிடம் இந்தியை மட்டுமே பேசுவது , இந்தியில் மட்டுமே அறிவிப்புகள் தருவது, இந்தியில் கையெழுத்து  போடவேண்டும் என கட்டாயப்படுத்துவது, இந்தியை பாடமாக கற்க வேண்டும் என வலியுறுத்துவது, இந்தி அல்லாத பிற மொழிகளை புறக்கணிப்பது போன்ற செயல்களில் இதே பாஜக அரசு ஈடுபடுவது கொள்கை முரணாகவே உள்ளது.

இந்தி தெரியாத சீன அதிபரிடம் சீன மொழியில் பேசத் தெரிந்த உங்களுக்கு இந்தி அறியாத அல்லது இந்தி அறிய விரும்பாத பல கோடி தமிழர்களிடம் அவர்கள் தாய் மொழியில் தகவல் அளிக்க ஏன் தெரியவில்லை? ஏன் தமிழ் மொழியையும் பிற மொழிகளையும் ஆட்சி மொழியாக்க விரும்பவில்லை? ஜப்பான் மக்களிடம் ஜப்பான் மொழியில் பேசமுடிந்த மோடியால் தமிழ் மக்களிடம் மட்டும் ஏன் இந்தியில் பேசுகிறார்?

தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்காத எந்த அரசும் நிலைக்காது . அந்த வகையில் இந்தியை அனைத்து தேசிய இன மக்களிடம் திணிக்க முயலும் பாஜக அரசும் படுகுழி பாதாளத்தில் வீழும். 
[vuukle-powerbar-top]

Recent Post