Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாநில தன்னாட்சியை நோக்கி தமிழகம் நகரட்டும் !

இந்திய அரசின் நேரடி தலையீடு இல்லாமல் மாநில அரசுகள் தங்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் தாங்களே இயற்றிக் கொள்வதே மாநில சுயாட்சியாகும். இந்திய அரசின் அனைத்து பொதுத்துறையும், மக்கள் சேவைகளும்  மாநில அரசுகளின் நேரடி கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் வரும்போது தான் ஒவ்வொரு தேசிய இனங்களின் தொழில் உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, மொழி உரிமை பாதுகாக்கப்படும்.

அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த நடிகர் மற்றும் ஆளுநரான ஆர்னால்டு நேரடியாக தமிழக அரசுக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். தான் முன்னெடுக்கும் சுற்றுப்புற சூழல் திட்டத்தில் தமிழக அரசும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் கலிபோர்னியாவும் தமிழகமும் உலகிற்கு முன்னுதாரணமாக திகழும் என்றும் கூறியுள்ளார்.

இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக  இந்திய அரசின் தலியீடு இல்லாமல் ஒவ்வொரு மாநிலமும் வெளிநாட்டு மாநிலங்கள் அல்லது வெளிநாட்டு அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். நமக்கான திட்டங்களை நாமே வகுக்க வேண்டும். நடுவண் அரசு aeதாவது ஒரு திட்டத்தை உருவாக்கி அதை மாநிலங்கள் மீது திணிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதின் மூலமாக மாநிலங்கள் தங்கள் தன்னாட்சி உரிமையை பாதுகாக்க இயலும்.

இதன்மூலம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளிலும் தமிழக அரசின் தாக்கம் இருக்கும். மாநிலங்கள் ஒப்புதல் இல்லாமல் சுப்பிரமணியன் சாமியை போன்றவர்கள் நமக்கான வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க முடியாத நிலையை நாம் உருவாக்க இயலும். இந்தியாவின் ஒரு மாநிலமாக தமிழகம் இருந்தாலும் தமிழகத்தின் தனித்தன்மையை, தன்னாட்சி அதிகார உரிமைகளை புரிந்து கொண்ட ஆர்னால்டு அவர்களுக்கு பாராட்டுகள். தமிழக அரசு அவருடைய திட்டத்திற்கு ஒத்திசைவு நல்க முன்வரவேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post