Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் சட்டப்பிரிவு 356 படி மாநில அரசை கலைக்கலாம். இதை கருத்தில் கொண்டே பல போராட்டங்களை மாநில அரசு ஒடுக்கி வருகிறது. ஆனால் அந்த சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போனதற்கு காரணம் நடுவண் அரசாக இருக்கும் போது ஏன் மாநில அரசை கலைக்க வேண்டும்? நடுவண் அரசை அல்லவா கலைக்க வேண்டும் !

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் 90 விழுக்காடு நடுவண் அரசை கண்டித்து தான் நடக்கிறது. இப்போது மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட தொடர்வண்டி போராட்டம், சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. ஈழப் பிரச்சனை, மீனவர் படுகொலை, இந்தித் திணிப்பு, மீத்தேன் எரிவாயு, அணு உலை என   எல்லா போராட்டங்களும் நடுவண் அரசை எதிர்த்தே நடைபெறுகிறது . இப்போராட்டங்கள் இன்னும் வீரியம் பேருமே தவிரே குறையப்போவதில்லை. நடுவண் அரசோ மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே செயல்படுகிறது. இந்த நிலையில் மாநில நலனுக்கு எதிராக செயல்படும் நடுவண் அரசு கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அனைத்து தரப்பு மக்களாலும் முன்வைக்கப் பட வேண்டும். 356 சட்டப் பிரிவைப் போலவே தேசிய இன மக்களுக்கு எதிராக செயல்படும் நடுவண் அரசை கலைக்க புதிய சட்டப் பிரிவை உருவாக்க நாம் அனைவரும் கோரிக்கை வைப்போம் . அப்போது தான் தேசிய இனங்களின் உரிமைகள் காக்கப்படும். இல்லையெனில் காலம் முழுவதும் மக்கள் அடிமைகளாக போராட்டம் மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும். சிந்திப்போம் , செயல்படுவோம். 
[vuukle-powerbar-top]

Recent Post