Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் தீபாஜினி என்ற கல்லூரி மாணவிக்கு அவசர கல்வி உதவி தேவை !

சேலம் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்து மாணவி தீபாஜினி கணினி இளநிலை பட்டப்படிப்பு (B.C.A.)படித்து வருகிறார். மூன்றாம் ஆண்டு படிக்கும் இவருக்கு முதல் பாதி கல்லூரி கட்டணம் கட்ட வேண்டி உள்ளது. மிகமும் ஏழ்மையான சூழலில் வாழும் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் சில நல்லவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்தி படிக்க வைத்துள்ளனர். ஆனால் மூன்றாம் ஆண்டு இவருக்கு உதவி கிடைக்கவில்லை. இவரது தந்தை கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கை விரல்களை விபத்தில் இழந்த ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். குடும்பமும் பெரிய குடும்பம். அதனால் பெண்ணை படிக்க வைக்கும் அளவிற்கு இவர்களுக்கு வசதி இல்லை. தீபாஜினி மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடித்தால் அவருக்கு  ஓரளவு நல்ல வேலை கிடைக்கலாம். இவரின் வாழ்க்கைக்கு கல்வியின் மூலமாக வெளிச்சத்தை காட்ட விருப்பமுள்ள நண்பர்கள் தயவு செய்து இந்த பெண்ணுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  கட்டணம் கட்டாததால் தற்போது தேர்வு எழுத முடியாத சூழலில் தீபாஜினி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இவருக்கு தற்போது தேவைப்படும் கல்வி உதவித் தொகை ரூபாய் 21,000 (இருபத்தி ஓராயிரம்) ஆகும். இவரை பற்றி நான் ஏற்கனவே இவரது கல்லூரி ஆசிரியரிடம் விசாரித்தேன். மேலும் விசாரிக்க விரும்பும் நண்பர்கள் கல்லூரிக்கு அழைப்பு கொடுத்ததும் விசாரிக்கலாம். இவரது குடும்பத்துடன் பேசி உதவி வழங்க இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் - 9994179723. நேரில் சந்தித்தும் உதவி செய்யலாம்.

தீபாஜினி வங்கிக் கணக்கு எண் :

NAME:  B DEEPAJINI
BANK & BRANCH: INDIAN OVERSEAS BANK,THAMMAMPATTY BRANCH
A/C  NO: 278401000000569



[vuukle-powerbar-top]

Recent Post