Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செய்தி : கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஊழியர்  நடத்திய துப்பாக்கி சூட்டில் சக ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் பிரதாப் சிங் இந்த படுகொலைக்கு சொன்ன காரணம் சிந்திக்க வைக்கிறது. கொல்லப்பட்டவர்கள் விஜய் பிரதாப் சிங்கை கேலி செய்து வந்ததாகவும் அவரை தரக் குறைவாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் விஜய் பிரதாப் சிங் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தொலைவில் உள்ள தமிழகத்தில் வாழ்ந்து வருவதாலும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து சக ஊழியர்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் விஜய் பிரதாப் சிங். கொல்லப்பட்ட மூவரில் இருவர் தமிழர்கள். இன்னொருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். நெய்வேலி அனல் மின் நிலையத்தில்  இதே தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் தமிழ் ஊழியரை சுட்டுக் கொன்ற நிகழ்வும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவண் அரசின் தரவான கொள்கையால் பல மாநிலத்தில் இருந்து மண்ணின் மொழி தெரியாத , மண்ணின் பண்பாடு தெரியாத பல பாதுகாப்பு படை ஊழியர்களை நடுவண் அரசு தங்கள் நிறுவனங்களுக்கு பணியில் அமர்த்துகிறது. மாநிலத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மக்களை தான் பணியில் அமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன, பாதுகாப்பு படை ஊழியர்கள் மட்டுமல்லாது வங்கி , தொடர்வண்டி போன்ற மற்ற சேவை நிறுவனங்களிலும் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தினால் எந்த வித சிக்கலும் வராது. யாரும் மொழி தெரியாத பண்பாடு தெரியாத மற்ற மாநிலங்களில் குடும்பத்தை பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படாது. தேவையில்லாமல் இது போன்ற சண்டை சச்சரவுகளும் அடிதடி கொலைகளும் நிகழாது. மொழி தெரியாத பாதுகாப்பு படை ஊழியர்களால் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் பொது மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதை சென்னை விமான நிலையத்தில் கூட நாம் கண்கூடாக பார்க்கலாம்.

தமிழக அரசு இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி அனைத்து நடுவண் அரசின் பாதுகாப்பு ஊழியர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் . நடுவண் அரசு நிறுவனங்களை படிப்படியாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக நடுவண் அரசு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் வேலைக்கு நியமித்தல் வேண்டும். தமிழகக் காவல்துறையை இந்த நிறுவனங்களில் பணியில் அமர்த்த வேண்டும். அப்போது தான் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதுடன் மாநில மக்களின் வேலை வாய்ப்பும் சுயமரியாதையும் பாதுகாக்கப்படும்.




[vuukle-powerbar-top]

Recent Post