Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நான் சிறுவயது முதலே அரசியலில் உள்ளேன்.  26 ஆண்டுகளுக்கு மேல் நான் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளேன்.  

என்னடைய முகநூல் நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர நினைக்கிறன். எப்போது புதிய நடுவண் அரசு பொறுப்பேற்றதோ அப்போது இருந்தே மாநிலங்களின் செயல்பாடுகளில் நடுவண் அரசின் தலியீடு மிக அதிகமாகி உள்ளது.

மத்திய மாநில அரசுகள் புரிந்துணர்வுடன் சட்ட அதிகாரங்களை இணைந்து செயல்படுத்துவது தான் கூட்டாச்சி அமைப்பின்  அழகாகும். சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து முடிவுகள் எடுப்பதும், கொள்கைகளை வகுப்பதும் தான் நடுவண் அரசின் முதன்மையான வேலையாகும். நடுவண் அரசும் மாநில அரசும் அவரவர் எல்லையில் இருந்து கொண்டு அடுத்தவர் எல்லையில் மூக்கை நுழைப்பதும் அதிகாரங்களில் தலையிடுவதும் கூடாது.    

ஆனால் இப்போதெல்லாம் நடுவண் அரசு தேவையில்லாமல் அதிகமாக மாநில விவகாரங்களில் தலையிடுகிறது. நம்முடைய அரசியல் சாசனப்படி வரவேற்க முடியாதது.

மிகச் சிக்கலான விடயங்களைப் பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளில் கூட நடுவண் அரசின் அழுத்தம் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பல சமூக பிரிவினர் இடையே கலக்கமும் குழப்பமும் ஏற்படுகிறது. இந்த வேலைகள் அனைத்தும் நடுவண் அரசின் துணையோடு நடைபெறுகிறது. ஒரு அரசாக செயல்பட வேண்டிய இந்திய அரசு  ஒரு கட்சியாகவே செயல்படுகிறது.

இப்படியான நடைமுறை முன்எப்போதும் நடைபெறாதது, இது குடியரசு ஆட்சிக்கும் நீதி நெறிமுறைக்கும் எதிரானது. இந்திய அரசியல் அமைப்பின் விதிமுறையை மீறும் இத்தகைய செயல்பாடுகள் மிக ஆபத்தான அறிகுறிகளை நமக்கு காட்டுகிறது. இதனால்  இந்தியக் கூட்டாச்சி அமைப்பு சீர்குலைவதுடன் நாட்டின் குடியாட்சி இழையும் அறுபடுகிறது.  

என்னுடைய பார்வையில்,  மக்களாட்சியை, மாநிலங்களின் கூட்டாச்சியை விரும்பும் நண்பர்களிடம் இந்த செய்தியை பகிர்வது காலத்தின் தேவையாகும்.

வகுப்புவாதம், மதவாதம், சமூகங்கள் இடையே கலக்கத்தை தூண்டும் சக்திகளை நாம் ஒற்றுமையுடன் எதிர்கொள்வோம் .

நாம் அனைவரும் சேர்ந்து இந்த நாட்டின் கூட்டாச்சி தத்துவத்தை பாதுகாப்போம். 

- மமதா பானர்ஜி . மேற்கு வங்காள முதல்வர் 

[vuukle-powerbar-top]

Recent Post