Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதிய விளையாட்டு போட்டிகள் உருவாக்கம்.  கிரிக்கெட் விளையாட்டின் ஏகாதிபத்திய ஆதிக்கம் முடிவுக்கு வருமா ?

பெருநிறுவனங்களும், மேட்டுக்குடி மக்களும் கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே ஊக்குவித்த காரணத்தால் இந்திய ஒன்றியத்தில் வாழும் இரு தலைமுறைகள் எந்த ஒரு விளையாட்டிலும் ஒளிர முடியாமல் போனது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஒன்றியம் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்துள்ளது. உலகமே உற்று நோக்கும் ஒலிம்பிக் விளையாட்டு, உலகக் கோப்பை கால்பந்து , சர்வதேச தடகள போட்டிகள் என எதிலும் இந்திய ஒன்றிய மக்களால் கலந்து கொள்ள முடியவில்லை. மக்கள் தொகையில் முதன்மையில் இருந்தாலும் பதக்கப் பட்டியலில் இந்தியா தான் கடைசி நாடாக வந்துள்ளது . ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்திய ஒன்றிய மக்கள் கிரிக்கெட் பார்த்து கைதட்டி ரசித்து வந்தனர். இதனால் கிரிக்கெட் நிறுவனம் பண மழையில் கொழித்தது. மக்களின் மேல் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியது. மக்களை வேறு எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த விடாமல் தொடர்ந்து போட்டிகளை உருவாக்கி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

இந்நிலையில் பெரு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த  கிரிக்கெட் விளையாட்டை கடந்து சிந்திக்க தொடங்கியது. பணம் சம்பாதிக்க கிரிக்கெட் மட்டும் தான் பயன்படுமா?  வேறு விளையாட்டின் மூலமாக ஏன் பணம் சம்பாதிக்க முடியாது ? வேறு விளையாட்டில் மக்களை ஏன் இழுக்க முடியாது என்று சிந்திக்கத் தொடங்கியது பெரு நிறுவனங்கள். எத்தனை ஆண்டுகள் தான் கிரிக்கெட் விளையாட்டு மற்ற விளையாட்டுகளை தனது அசுர பலத்தால் தடுத்து வைக்க முடியும்? உலக மயமாக்கல் , மக்களின் பன்முக கேளிக்கைப் பசி இவற்றுக்கு முன்னால் கிரிக்கெட் என்னும் பெரு முதலாளியும் வீழ்த்தப்படலாம்.

அதற்கான சான்றுகள் தான்  இப்போது உருவாகியுள்ள கபடி போட்டிகள் , கால்பந்து போட்டிகள். ஐ.பி.எல் போட்டிகளுக்கு இணையாக இப்பொது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகளும் பல்வேறு நாட்டில் இருந்து திறமையானவர்களை உள்நாட்டு  போட்டிகளில் விளையாட வைத்துள்ளது. கால்பந்து போட்டியின் விறுவிறுப்பு, குறைவான நேரம், ஆட்ட விதிமுறைகள் எளிமையாகப் புரிதல் போன்ற பல அம்சங்கள் கிரிக்கெட் விளையாட்டை நிரந்தரமாக ஓரம் கட்டலாம். அதற்கு இங்கிலாந்து கால்பந்து போட்டிகளே சிறந்த உதாரணம் ஆகும். இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டை வேறு எந்த விளையாட்டும் விஞ்ச முடியவில்லை. எனினும் மற்ற விளையாட்டுகளும் அங்கு மதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ, விளையாட்டுகளை பெரு நிறுவனங்கள் தங்கள் கையில் எடுத்துள்ள காரணத்தால் எந்த விளையாட்டு மக்களை அதிகம் கவருகிறதோ அந்த விளையாட்டு நிச்சயம் நிலைபெறும். இந்திய தேசப்பற்றை காரணம் காட்டி ஒரு விளையாட்டை வளர்க்க முடியும் என்றால் அது கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே சாத்தியம் ஆகும். வேறு விளையாட்டில் அது சாத்தியம் இல்லை. அதனால் தேசப்பற்றை வைத்து இனி கிரிக்கெட் விளையாட்டு சிறுது காலம் தாக்கு பிடிக்கலாம்.  ஆனாலும் முன்பு செலுத்திய சர்வாதிகார ஆதிக்கத்தை இனி கிரிக்கெட் விளையாட்டு இந்திய ஒன்றிய மக்களிடையே செலுத்த முடியாது என்பது மட்டும் இப்போது உறுதியாகி உள்ளது. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் !!




[vuukle-powerbar-top]

Recent Post