Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாநில தன்னாட்சி உரிமை கோரும் மராத்திய தேசிய கட்சித் தலைவர் ராஜ் தாக்ரே !! தமிழக அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு !!

இன்று மராத்திய தேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் மராத்திய தேசியம் இப்போது அங்கு அதிகம் பேசப்படுகிறது. இந்திய தேசிய மயக்கத்தில் இருந்தது போதும் மராத்திய தேசியர்களாக இணைவோம் என்ற செய்தியை மராத்திய தேசிய கட்சிகள் முழங்கி வருகின்றன.

இந்திய தேசிய கட்சிகள் மராத்திய மாநில தேர்தலில் இருந்து தள்ளி நிற்கட்டும் . மராத்திய தேசத்தை மராத்தியர்கள் பார்த்துக் கொள்வார்கள். மராத்திய தேசத்திற்கு தன்னாட்சி உரிமை வேண்டும் . நடுவண் அரசு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை மட்டும் பார்த்துக் கொள்ளட்டும் . மாநிலத்திற்குள் உள்ள பிரச்சனைகளை பற்றி மாநில கட்சிகளான நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  மராத்திய தேசத்தில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் மராத்திய மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். இனி வெளியாரை இம்மண்ணில் பணியில் அமர்த்த நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். தேசிய கட்சிகள் இரு மாநிலங்களின் ஆட்சியை நடத்துவதால் இரு மாநிலங்கள் இடையே நடக்கும் பிரச்சனைகளை தேசிய கட்சிகளால் தீர்க்க இயலாது. அதனால் தேசிய கட்சிகள் மாநில தேர்தலில் போட்டியிடக் கூடாது. மாநில தன்னாட்சி உரிமை கிடைக்கும் வரை எங்கள் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுக்காது. மராத்திய தேசத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட வேண்டும். இது குறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் நாம் கடிதம் எழுதுவேன். இவ்வாறு அதிரடியான கருத்துகளை கூறியுள்ளார் ராஜ் தாக்ரே.

இந்தித் திணிப்பு, மாநில அதிகாரம் பறிக்கப்படுதல். கனிம வளங்கள் கொள்ளை, கல்வி, வணிகம், வேலை வாய்ப்பு உரிமைகள் பறித்தல் என மாநில நலனுக்கு எதிராக இந்திய அரசு பல வேலைகளை செயல்படுத்தும் நிலையில் தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் இந்திய அரசை எதிர்க்க வேண்டும். இரண்டாம் சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பதின் மூலமாக தான் தேசிய இனங்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடியும் . இல்லையெனில் இந்தி தேசிய இனம் மட்டுமே இந்த நாட்டில்  முழு சுதந்திரத்தை அனுபவிக்கும். மற்ற இனங்கள் அடிமைப்பட்டு கிடக்கும். மாநில தன்னாட்சியை வலியுறுத்தும் ராஜ் தாக்ரேவை நாம் பாராட்டும் அதேவேளையில் தமிழகத் அரசியல் கட்சிகள் தங்கள் இன உரிமையை நிலைநாட்டே குரல் எழுப்ப வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இனி தமிழக அரசியல் செயல்பாட்டாளர்கள் அதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.


[vuukle-powerbar-top]

Recent Post