Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசுக்கு இந்த தீர்ப்பு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய நாடு இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி வரும் வேளையில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்குவது உலகத் தமிழர்களுக்கு பெரும் ஆறுதலாகும். இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களை பகிரங்கமாக முன்னெடுக்கலாம். இலங்கை அரசுக்கு அங்கிருந்த படியே அரசியல் நெடுக்கடியை உருவாக்கலாம் . சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி இனப்படுகொலைக்கான நீதியை கோரலாம். ஐநா அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வர புலிகள் இயக்கம் இன்னும் வீரியமுடன் செயல்படலாம். காவல்துறை அச்சுறுத்தல் போன்ற சிக்கல் இல்லாமல் ஜனநாயக முறையில் புலிகள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம்.

இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை நீக்கி தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும். அதற்கு முதலில் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக அரசு நடுவண் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதுவரை புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்றே தமிழக அரசு கூறி வந்துள்ளது . இப்போது ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்புக்கு அமைவாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்கள் எந்த வித காவல்துறை அச்சுறுத்தல் இல்லாமல் , சிறப்பு முகாம் வதை முகாம் சிக்கல் இல்லாமல் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும். பல லட்சம் தமிழர்கள் ஈழத் கொல்லப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு என்று பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கினால் புலிகள் அமைப்பு தமிழகத்தில் எந்த வித சிக்கல் இல்லாமல் செயல்பட முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கவும் , சிங்கள அடக்குமுறையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் புலிகள் அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க தமிழக அரசும் , இந்திய அரசும் உதவ வேண்டும் என்பதே நம் கோரிக்கையாக உள்ளது.


 

[vuukle-powerbar-top]

Recent Post