Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அன்றாட வாழ்வில் தமிழ் என்ற தலைப்பில் ஞாயிறு அன்று முகநூல் சந்திப்பு நடந்தது. நம் அழைப்பை ஏற்று பல தமிழ் ஆர்வலர்கள் வந்திருந்தனர். பர்மாவில் இருந்து சகோதரி சியாமளா வந்திருந்தார். அவர் முகநூல் தமிழர்கள் மூலமாக எவ்வாறு தன்னுடைய மகனின் அறுவை சிகிக்சை வெற்றிகரமாக நடந்தது என்பதை உருக்கமுடன் கூறினார். தஞ்சையில் இருந்து கோவில் கட்டடக் கலை ஆய்வாளர் திரு. மெய்மன் அவர்கள் வந்திருந்தார். அவர் தஞ்சை பெருங்கோவில் பின்புலத்தில் உள்ள கட்டடவியல் ரகசியங்கள் , தொழில்நுட்பங்கள், வரலாற்று செய்திகளை முகநூல் நண்பர்களுக்கு விளக்கிக் கூறினார். அதன் பின்னர் தமிழில் இரண்டறக் கலந்துள்ள வடமொழிச் சொற்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் குறித்த விளையாட்டு போட்டியும் நடைபெற்றது. அன்றாட வாழ்வில் தமிழை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து பல நண்பர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள். சிறப்பாக உரையாற்றிய மூன்று நபர்களுக்கு தமிழர் கடை வழங்கிய மென்னாடை பரிசாக வழங்கப்பட்டது.


நம் முகநூல் சந்திப்பை கேள்விப்பட்ட காவல்துறை இரு காவல்துறை பணியாளர்களை அரங்கிற்கு அனுப்பி வேவு பார்த்தது. ஆனால் இந்த காவலர்களுக்கு முகநூல் நண்பர்கள் சந்திப்பு  பற்றி எதுவும் தெரியவில்லை. முகநூல் வழியாக எப்படி மக்கள் கூடுகிறார்கள் என்று நம்மிடம் கேட்டனர். மேலும் மொழி சார்ந்த இப்படியான நிகழ்வில் கூட கலந்து கொள்ளும் காவல்துறை இந்தி மொழி, மலையாள மொழி சார்ந்த கூட்டங்களுக்கும் சென்று மூக்கை நுழைப்பார்களா என்று தெரியவில்லை. தமிழர்கள் மட்டும் எங்கும் எப்போதும் ஒன்று கூடி ஒரு நிகழ்ச்சி நடத்திவிடக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. எனினும் தமிழர்களின் தனித்திறமையை இம்முறை காவல்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தின் மூலமாக நன்கு அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

நம் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் !

நபர்களை கேள்விகள் கேட்கப்பட்டது. 
[vuukle-powerbar-top]

Recent Post