Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆர்.எஸ்.எஸ் - பாஜக அரசு  ஒன்றுக்கு ஒன்று துணையுடன் பகிரங்கமாக செயல்படத் தொடங்கியுள்ளன . தேசிய இனங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் !!

எப்போதும் இல்லாதவாறு இப்போது இந்துத்வா அரசியல் மிகப் பலமாக இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்திய அரசு தொலைக்காட்சியில் ஆர் .எஸ்.எஸ் தலைவர் பகவத் நேரடியாக மக்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். இந்தியாவில் வாழும் தேசிய இனங்கள் யாவும் இந்து, இந்தி அடையாளத்தை ஏற்று வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ் அமைப்பின் அடிப்படை செயல்திட்டமாக உள்ளது. பகவத் பேச்சும் அதைப் உணர்த்துவதாகவே உள்ளது.

மேலும் மோடி பாஜக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செயல்திட்டங்களை மோடி ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து வருவதால் மோடியே ஆர் எஸ் எஸ் கட்சியின் சிறந்த தேர்வு என்பதை அதன் தலைவர் சுட்டிக் காட்டி உள்ளார். இலங்கையில் பௌத்த மதவாத அடிப்படையில் செயல்படும் பொதுபலசேனா அமைப்பை போலவே இந்தியாவிலும் தேசிய இனங்களுக்கு எதிரான இந்துத்வா அமைப்பை ஆர்.எஸ்.எஸ் கட்டி எழுப்பி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தித் திணிப்பு , சமஸ்கிருத திணிப்பு, ஆரியப் பண்பாட்டு திணிப்புகள் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செல்லப்பிள்ளையாக செயல்பட்டு இந்த்துவாவின் ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு,  ஒற்றை மதக் கொள்கையை திறம்பட செயல்படுத்தி வருகிறது.

பல தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அடிப்படைவாத அமைப்புகளும் அரசும் சேர்ந்து இயங்குவது மிகவும் ஆபத்தானது. அது நாட்டின் பன்முகத் தன்மையை அழித்து விடும். அடிப்படைவாத அமைப்புகள் மத ரீதியான கலவரத்தை தூண்டும் போது அதற்கு  அரசு அதரவு வழங்காமல் கடுமையாக மதவாதத்தை ஒடுக்க வேண்டும். அப்போது தான் நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். இப்போது பாஜக அரசும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பும் பகிரங்கமாக சேர்ந்து இயங்குவது ஒட்டுமொத்த தேசிய இனங்களுக்கும் ஆபத்தானது.

ஆகவே பாஜக அரசானது ஆர் எஸ் எஸ் அமைப்பில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் நிலைபாட்டை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று பாஜக அரசு சொல்வது தான் நேர்மையானதாக இருக்கும். இந்த நிலையை ஏற்படுத்த மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை நாம் அனைவரும் முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநில அரசுகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மாநில அரசுகள் முதலில் தங்கள் மாநிலங்களில் தடை செய்தல் வேண்டும் . அதற்காக நாம் அனைவரும் குரல் கொடுப்போம்.



[vuukle-powerbar-top]

Recent Post