Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லி மெட்ரோ தொடர்வண்டி நிலைய காவல்துறை அறையில் வைத்து மூன்று ஆப்பிரிக்க கறுப்பின இளைஞர்களை இந்தியர்கள் கூட்டமாக தாக்கியுள்ளனர். ஆப்பிரிக்க இளைஞர்கள் டெல்லி பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு. குற்றம் உண்மையாவே இருக்கும் பட்சத்திலும் அவர்களை காவல்துறையில் வைத்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இத்தனை இந்தியர்கள் சேர்ந்து மூன்று வெளிநாட்டு இளைஞர்களை இனவெறியுடன் தாக்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் தாக்குதல் நடத்தும் போது ஆர்.எஸ்.எஸ் வெறியர்களின் தாரக மாத்திரமான 'பாரத் மாதா கி ஜெய்' 'வந்தேமாதரம்' போன்ற முழக்கங்களை எழுப்பி உள்ளனர் இந்தி வெறியர்கள்.

வெளிநாட்டு மக்களை இப்படி வெறி கொண்டு தாக்கும் இந்தியர்கள் நாளை தமிழர்களையும், வடகிழக்கு மக்களையும் இன வெறியுடன் தாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். ஏற்கனவே தமிழர்கள் இந்தி திணிப்புக்கும், சமஸ்கிருத திணிப்புக்கும் இந்தியத்திற்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இதையே காரணமாக வைத்து இந்தி வெறியர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்லி தமிழர்களையும் தாக்க வாய்ப்புள்ளது.

இப்படியான தாக்குதல் உலக அளவில் ஒரு தவறான செய்தியை கூறுவதாகவே அமையும். மேலும் இந்தியர்கள் பலரும் ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்கிறார்கள், அங்கு ஆப்பிரிக்கர்கள் இந்தியர்களை தாக்கத் தொடங்கினால் நிலைமை மிக மோசமாகி விடும். இந்திய தேசப்பற்றை காரணமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் மக்களை இப்படி இந்தி வெறியர்களாக மாற்றி வருவது வேதனை அளிக்கிறது. தாக்குதல் நடத்திய இந்தி வெறியர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  





[vuukle-powerbar-top]

Recent Post