Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம்மொழி - தமிழர்களுக்கான குறும்படம் !

தமிழர் பண்பாட்டு நடுவம் தயாரித்துள்ள முதல் குறும்படம் நம்மொழி. நம் மொழி எங்கெல்லாம் புறக்கணிக்கப்படுகிறது என்பதை நாம் தொடர்ந்து சுட்டி காட்டி வருகிறோம். அந்த வகையில் ஆங்கில மொழி தெரியாததால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் பல லட்சம் தமிழர்கள் தங்களுடைய அடிப்படை தாய் மொழி உரிமையை நிலைநாட்டவே இப்படத்தை நாம் வெளியிட்டு உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற செய்தியை நாம் இப்படத்தின் மூலம் சொல்கிறோம். ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டாடும் நிறுவனங்கள் தயவு செய்து இப்படத்தை ஒரு முறை பார்க்கவும். குறிப்பாக வேலை வாய்ப்பை தரக்கூடிய மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள் தயவு செய்து இப்படத்தை பார்த்து நம்மொழியின் பயன்பாட்டை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம். பெரு நிறுவனங்களின் வேலை செய்பவர்கள் உங்கள் சக ஊழியர்களிடம் இப்படத்தை பார்க்க சொல்லவும்.

நம் மாற்றத்திற்கான பத்து நிமிட குறும்படம் நம்மொழி. பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை பகிரவும். மாற்றத்தை நம்மிடம் இருந்தே தொடங்குவோம்.  
[vuukle-powerbar-top]

Recent Post