Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடி அரசின் விளம்பர யுத்தி.  இந்தி சமஸ்கிருதத்தை திணிக்க புதிய புதிய திட்டங்கள் !!

பாஜக அரசு தூய்மை இந்தியா, புதுமை இந்தியா, இளமை இந்தியா என்று புதிய புதிய திட்டத்தை இப்போது உருவாக்கி வருவதை நாம் பார்க்க முடிகிறது. இதில் இரண்டு வகையில் பாஜகவின் இந்துத்வாவிற்கு வெற்றி கிடைக்கிறது.

௧. இப்புதிய திட்டங்களுக்கு பாஜக அரசு வைக்கும் திட்டங்கள் அனைத்தும் இந்தி மற்றும் சமஸ்கிருத பெயரில் மட்டுமே இருக்கும். இப்பெயர்களை மொழி பெயர்க்காமல் நடுவண் அரசின் கீழ் இயங்கும் தொடர்வண்டி நிலையம், தொலைக்காட்சி , வானொலி நிலையங்கள் இந்தி அல்லாத மாநிலத்திலும் அப்படியே பயன்படுத்தும். இதன் மூலம் இந்தியை , சமஸ்கிருத மொழியை இந்தி அல்லாத தேசிய இன மக்களின் திணிப்பது.

௨. இந்த திட்டங்களை முன்னெடுப்பதின் மூலமாக மோடிக்கும், மோடியின் கீழ் இயங்கும் அமைச்சர்களுக்கும் நல்ல விளம்பரம் தேடிக் கொள்வது. மோடியும் மற்ற அமைச்சர்களும் வீதியில் வந்து சுத்தம் செய்வது போன்ற காட்சிகளை ஊடகத்தில் வெளியிட்டு தாங்கள் தான் இந்தியாவிற்கு வழிகாட்டியாக செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வது. இதன் மூலம் அரசு செலவில் பாஜகவிற்கு இலவச விளம்பரம் கிடைக்கிறது.

மதுரையில் உள்ள அனைத்திந்திய வானொலி அலுவலகத்தில் தமிழையே பயன்படுத்தாமல் இந்தியில் தூய்மை இந்தியா விழாவை கொண்டடி உள்ளனர். கன்னியாகுமரியில் பொன். இராதாகிருஷ்ணன் தமிழையே பயன்படுத்தாமல் இந்தியில் தூய்மை இந்தியா பரப்புரை செய்துள்ளார் . அனைத்து வங்கிகளும் இந்தியில் மட்டுமே பரப்புரை செய்துள்ளது. இப்படியாக பாஜக அரசு மிகவும் மூர்க்கத் தனமாக இந்தியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் திணித்து வருகிறது.

தூய்மை இந்தியா என்று விளம்பரம் தேடிக் கொள்ளும் மோடி அரசுக்கு நாம் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான். முதலில் தேசிய இனங்களை , அவர்கள் மொழிகளை, அவர்கள் பண்பாடுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடுங்கள். ஒரு மொழி , ஒரு பண்பாடு, ஒரு மதம் போன்ற மாயையில் இருந்து விடுபடுங்கள். அப்போது தான் உண்மையில் இந்திய நாடு தூய்மை அடையும்.


[vuukle-powerbar-top]

Recent Post