Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் அரைக்கால் சட்டை சீருடையுடன் பேரணி நடத்த முயன்ற வடநாட்டு இந்துத்வா ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகள் !!

தமிழகத்தில் வடநாட்டு பண்பாட்டை சுமந்து வரும் ஆரிய இந்துத்வா ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழகமெங்கும் அவர்களுடைய தலைவர்களின் படங்களுடன் அரைக்கால் சட்டையுடன் பேரணி நடத்த முற்பட்டனர். பொது வெளி என்று கூட பார்க்காமல் அரைக்கால் சட்டை சீருடையுடன் , ஆயுதங்கள் ஏந்தியும் அவர்கள் பேரணி நடத்த முற்பட்டனர். மேலும்  'பாரத் மாதா கீ ஜே' என்று இந்தியில் முழக்கமிட்டு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வேலையையும் செய்தனர். இவர்கள் செய்யக்கூடிய பேரணி தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாத பேரணியாகும். இந்தி பண்பாட்டை மட்டுமே பறைசாற்றும் பேரணியாகும்.

தமிழகத்தில் மதங்களை கடந்து இணக்கமுடன் வாழும் தமிழக மக்களை இவ்வாறான ஆரிய மதவெறி கொண்ட பேரணி அச்சப்பட வைக்கும். இதற்கு தமிழக அரசு இடமளிக்கக் கூடாது என்று ஏற்கனவே தமிழ் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில் ஆரிய மதத்தை தமிழகத்தில் நிலைநிறுத்தவும், இந்திப் பண்பாட்டை இங்கு பரப்பவும் தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ் தேசிய தீவிரவாத அமைப்பு நடத்திய பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்து அவர்களை கைது செய்துள்ளது.

மக்களிடம் பிரிவினையை தூண்டி அவர்களை அச்சப்பட வைக்கும் தமிழர் பண்பாட்டிற்கு எதிரான இப்படியான பேரணியை தடை செய்த தமிழக அரசுக்கு தமிழர்களின் சார்பில் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  

[vuukle-powerbar-top]

Recent Post