Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வியக்க வைக்கும் திராவிடர்களின் செயல்திறன். தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.  

எங்கெல்லாம் தமிழ் பெருமைப்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் உடனே திராவிடர்கள் தமிழைக் கொச்சைப்படுத்தும் பதிவை போட்டுவிடுவார்கள். தொல்காப்பியம் பெருமை வாய்ந்த நூல் என்றால் அது ஆரிய அடிமை எழுதியது என்பார்கள். திருக்குறள் பற்றி எழுதினால் அது பெண்ணடிமையை பேசும் நூல் என்பார்கள். இராசராசனின் ஆளுமையை பற்றி பெருமையை பற்றி பேசினால் அவன் சாதி வெறியன் என்பார்கள். தமிழை பற்றி ஒருவர் உயர்வாக பேசினார் என்றால் உடனே அவர் ஒரு பார்ப்பனர் அவர் சம்ஸ்கிருத மொழியை உயர்வாக பேசியுள்ளார் என்பார்கள். தமிழ் ஒரு சிறப்பான அறிவியல் மொழி என்றால் இல்லை அது ஒரு காட்டுமிராண்டு மொழி என்பார்கள். 

இப்படியாக தமிழுக்கும் தமிழர்களுக்கும் எந்த வகையிலும் பெருமை வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்கள் திராவிடர்கள். உடனுக்குடன் தமிழர்களின் கருத்தை மறுக்க ஒரு படத்தையோ அல்லது இணைப்பையோ போட்டுவிடுகிறார்கள். ஆனால் திராவிடர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த தீமையை தமிழர்கள் சுட்டிக் காட்டினால் பொங்கி எழுந்து தனிமனித தாக்குதலில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள். தமிழர்களை நாஜிக்கள், இனத் தூய்மைவாதி என்று பழிப்பார்கள். திராவிடத் தந்தையை பற்றி ஒரு வார்த்தை குறை சொன்னாலும் அதற்கு வண்டி வண்டியாக விளக்கம் கொடுப்பார்கள். திராவிடத்தை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.     

மிகச் சிறந்த கட்டமைப்பு  உள்ளவர்களாக, செயல் வீரர்களாக, திராவிட இன உணர்வாளர்களாக திராவிடர்கள் விளங்குகின்றனர்.  தமிழினத்தை வஞ்சிப்பதை ஒரு தொழிலாகவே அவர்கள் செய்து வருகின்றனர். திராவிடர்களுக்கு இருக்கும் சுறுசுறுப்பு, தாக்குதல் திறன், செயல்திறன், அறிவுத்திறன் போன்றவற்றை தமிழர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு விடயத்தை மட்டும் தமிழர்கள் திராவிடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. அது தான் சூழ்ச்சி மற்றும் வஞ்சனை. வஞ்சிப்பது, துரோகம் செய்வது மட்டும் தமிழர்களுக்கு வராது. அதனால் அதற்கு முயற்சி செய்தல் வேண்டாம். மற்ற தன்மைகளை தமிழர்கள் கற்றுக் கொண்டால் நிச்சயம் தமிழினம் எல்லா பகையையும் வெற்றி கொள்ளும்.   


[vuukle-powerbar-top]

Recent Post