Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விரைவில் ஆபாச இணைய தளங்களுக்கு தடை - துக்ளக் அரசாட்சி செய்யும் மோடி.

இந்திய நாட்டின் பண்பாட்டிற்கு எதிராகவும், பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவும் காரணமாக இருக்கின்ற காரணத்தால் ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மோடி அரசு கருதுகிறது.

இணையம் என்பது ஒரு தடையில்லா ஊடகம் என்பது அறிவரும் அறிந்ததே. தொலைக்காட்சி, திரைப்படங்கள், செய்தித்தாள்கள் போல இணையத்தில் யாரும் ஒரு கருத்தை திணிக்க முடியாது, மக்களே விருப்பி தாங்கள் எந்த இணையத் தளத்திற்கு சென்று பார்வையிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள் . அது தனி மனித விருப்பத்தின் பெயரிலேயே நடக்கிறது. இந்த இணைய தளத்தை தான் பயன்படுத்த வேண்டும், இந்த இணைய  தளத்திற்கு செல்லக் கூடாது என்று யாரும் மக்களை கட்டாயப் படுத்த உரிமை இல்லை. புதிய தலைமுறை மக்கள் அப்படியான கட்டற்ற சுதந்திரமான அணுகுமுறையை தான் விரும்புகிறார்கள். இணையம் தகவல் சேகரிக்கும் மையமாக மட்டுமே இல்லாமல் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் ஊடகமாகவும் விளங்குகிறது. நன்மையில் தீமையும்,  தீமையில் நன்மையையும் என அனைத்தும்  உள்ளடக்கியது தான் இணையம். இதில் ஆபாச இணைய தளங்களும் அடக்கும். எதை ஆபாசம் என்று தீர்மானிக்கும் பொறுப்பு நாட்டு மக்களையே சேரும். எந்த அளவிற்கு ஆபாசம் வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு அல்ல. இணைய தளங்கள் திரைப்படங்கள் அல்ல . தணிக்கை செய்து வெளியிட. இங்கு தணிக்கை செய்யும் பொறுப்பு மக்களை சார்ந்ததாக  உள்ளது. சிறுவர்கள் ஆபாச இணையத்தை பயன்படுத்த முடியாத நிலையை பெற்றோர்களே உருவாக்கிட முடியும்.  18 வயதுக்கு மேற்பட்டவர்கள், மன முதிர்ச்சி அடைந்தவர்கள் தாங்கள் எதை பார்க்க வேண்டும் என்று தாங்களே முடிவு செய்து கொள்வார்கள்.

இந்நிலையில் ஆபாச இணைய தளங்களுக்கு தடை போட வேண்டும் என்று சொல்லும் அரசுக்கு சில கேள்விகள்.

இணையத்தில் உள்ள ஆபாசங்களை எவ்வாறு தரம் பிரிப்பீர்கள் ? எந்த அளவிலான ஆபாசத்தை அனுமதிப்பீர்கள் ?

ஆபாச இணைய தளத்திற்கு தடை விதிக்க வேண்டுமா வேண்டாமா என்று இளைஞர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினீர்களா ?

எத்தனை பேர்கள், எந்த வயது குழுவை சேர்ந்தவர்கள் ஆபாச இணைய தளங்களை மூட வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள் ?

கஜிராககோ கோவில் உட்பட நாட்டில் உள்ள ஆயிரக் கணக்கான கோவில்களில் மனித உறவுகளை வெளிப்படுத்தும் ஆபாச காட்சிகள் உள்ளன. அவற்றை எல்லாம் தடை செய்வீர்களா ?

ஆரிய இந்து மதத்தில் உள்ள பல்லாயிரம் ஆபாசக் கட்டுக் கதைகளை தடை செய்வீர்களா?

வடநாட்டு ஆரிய முனிவர் வாட்சாயனா  எழுதிய  காமசூத்ரா என்ற நூலை தடை செய்வீர்களா ?

ஆபாச இணைய தளங்கள் முடக்கபட்டால் , நாட்டில் பாலியல் தொழில் பெருகும், பாலியல் குற்றங்கள் பெருகும் அபாயம் உள்ளதே, அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?

பாலியல் விழுப்புணர்வு இல்லாத காரணத்தால் ஏயட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் அதிகம் பரவக் கூடுமே , அதற்க்கு என்ன செய்யப் போகிறது அரசு ?

உளவியல் ரீதியாக பாலியல் குறித்த விளக்கமில்லாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தில் அதற்காக தேடுகிறார்களே , அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?

இணைய தளத்திற்கு தடை விதித்து விட்டு, திரைப்படங்களில் பாலியல் உணர்வுகளை அதிகப்படியாக  தூண்டும் காட்சிகள் இடம்பெற அரசு சம்மதிக்கிறதே , அது எந்த வகையில் நியாயம்?

இப்படி பல கேள்விகளுக்கு அரசு பதில் அளித்துவிட்டு, ஆபாச இணைய தளத்திற்கு தடை விதிக்கலாம் இந்திய அரசு.






  
[vuukle-powerbar-top]

Recent Post