Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மலேசியாவில் இருந்து சென்னை வந்திறங்கிய வைகோ அவர்களுக்கு வரவேற்பு கொடுத்த மதிமுகவினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு வன்மையாகக் கண்டிக்க வேண்டியது. 

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் யாரும் கலந்து கொண்டதாக தெரியவில்லை. உலகத் தமிழ் மாநாட்டில் தலைவர்கள் கலந்து கொள்வது தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கை ஆகும். அந்த வகையில் வைகோ தமிழ் இனம் இப்போது சந்தித்து வரும் பெரும் சிக்கல்களை குறித்து அங்கு பதிவு செய்துள்ளார். அது உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநாடு முடித்து தமிழகம் வந்த வைகோவிற்கு நியாயமாக தமிழக அரசே வரவேற்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழக அரசு வானூர்தி நிலையில் கூடியிருந்த  மதிமுகவினர் சுமார் 400 பேர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது. சிறையில் இருந்து மீண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை வானூர்தி நிலையம் வந்தபோது அனுமதி இல்லாமல் பல ஆயிரம் தொடண்டர்கள் சாலை இருமருங்கிலும் நின்று கொண்டு வரவேற்பு கொடுத்தனர். அப்போது எல்லாம் பாயாத வழக்கு இப்போது வைகோவிற்கு அவருடைய தொண்டர்கள் வரவேற்பு கொடுக்கும் போது பாய்கிறது. இது தமிழக அரசின் தவறான அணுகுமுறையை காட்டுகிறது. அதிலும் குறிப்பாக வைகோ உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பும் போது தமிழக அரசு இவ்வாறு நடந்து கொள்வது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இப்படியான அராஜகப் போக்கை கடைபிடிக்கும்  தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் நம் கண்டனங்கள். 
[vuukle-powerbar-top]

Recent Post