Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக மேகாலயா உயர் நீதிமன்ற  முன்னாள் நீதிபதி டி. மீனாகுமாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவராவார்.

பல ஆண்டுகளாக இப்பதவியில் யாரும் இல்லாத நிலையில் இப்போது தமிழக அரசு மனித உரிமை ஆணையர் ஒருவரை தேர்வு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.  இருப்பினும் மற்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கிறது அந்த மாநில அரசுகள். தமிழகத்தில் மட்டும் வேற்று மாநில மக்களை தலைவராக நியமிக்கிறது தமிழக அரசு.

ஏற்கனவே தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் தமிழர் இல்லை, காவல்துறை ஆணையர் தமிழர் இல்லை, பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தமிழர்கள் இல்லை. அந்த வரிசையில் இப்போது மனித உரிமை ஆணையரும் ஒரு தமிழர் இல்லை. சென்ற ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தமிழர் ஒருவரை மனித உரிமை ஆணையராக நியமித்த போது கன்னடர்கள் கொதித்து எழுந்தனர். அவரை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். ஆனால் தமிழகத்தில் அப்படியான போராட்டங்களை எதிர்பார்க்க முடியாது.

தமிழகத்தில் சகாயம் போன்ற பல நல்ல அதிகாரிகள் இருக்கின்றனர். பல நீதிபதிகளும் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் தமிழக அரசு மனித உரிமை ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தமிழகத்தின் நீதிபதிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் தமிழர்களாக இருப்பதே தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வழி வகுக்கும். தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


[vuukle-powerbar-top]

Recent Post