Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாடு முழுவதும் உள்ள நடுவண் அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாகப்பட வேண்டும். அயல் மொழிகளை இனி கற்பிக்கக் கூடாது  - ஆர்.எஸ்.எஸ்.

இது மட்டுமில்லாது சமஸ்கிருதம் தெரியவில்லை எனில் ஒருவர் இந்தியராக இருக்கவே தகுதியற்றவர் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தினேஷ் காமத். இப்படியே போனால் அனைத்து நடுவண் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலம் நீக்கப்பட்டு சமஸ்கிருதம் முதல் பாடமாகவும், இந்தி இரண்டாம் பாடமாகவும் கட்டாயாமாகப்படும் என தெரிகிறது. சமஸ்கிருதமே இந்தியாவின் ஒற்றை அடையாள மொழியாக, இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் விரும்புகிறது. இதற்கு பாஜக அரசு ஆதரவு வழங்குகிறது. வரும் தேர்தலில் பாஜக அனைத்து மக்களிடமும் சமஸ்கிருத மொழியில் தேர்தல் பரப்புரை செய்யுமா ? அம்மொழியில் வாக்கு கேட்குமா ? அப்படிக் கேட்டால் மக்கள் வாக்களிப்பார்களா என்று சிந்திக்கத் தவறுகிறது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்.

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்து இந்தி சமஸ்கிருத திணிப்பை கடைபிடித்து வருகிறது. மக்களின் மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மொழியை உயர்வு மொழியாக மக்களிடம் கொண்டு செல்கிறது. சமஸ்கிருத ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பிரமணர்கள் இதே தவறை செய்த காரணத்தால் தான் புத்த மதமே இம்மண்ணில் தோன்றியது. மக்களின் மொழியில் புத்தர் போதித்தார். அதனால் புத்த மதம் பெரும் செல்வாக்கு பெற்றது. மீண்டும் அதே நிலை வட இந்தியாவில் உருவாகும் எனத் தெரிகிறது. தமிழர்களுக்கு எந்த விதத்திலும் சிக்கல் இல்லை என்றாலும் இந்தியர்கள் தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்திடம் சிக்கி சின்னாபின்னமாக உள்ளனர். மக்கள் விரோத கொள்கையை கடைபிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜக வின் வீழ்ச்சி விரைவில் தொடங்கும்.

[vuukle-powerbar-top]

Recent Post