Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஷ்மீர் தேர்தல் பரப்புரையின் போது மோடி பேசியது, காஸ்மீர் மக்களே இனியும் நீங்கள் மாநில கட்சிகளை நம்பாதீர்கள். அவர்களால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் உங்களுக்கு எந்த முன்னேற்றத்தையும் வழங்க முடியாது . எங்களை போன்ற தேசிய கட்சிகளே மாநிலத்தை முன்னேற்ற முடியும் . எங்களால் தான் நலத் திட்டங்களை வழங்க முடியும் என்று பேசியுள்ளார்.

தமிழகத்தில் இரு பெரும் மாநில கட்சிகள் முடக்கப்பட்ட நிலையில் , பாஜக தமிழகத்தில் வேரூன்ற பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு நடுவண் புலனாய்வு துறையின் மூலமாக பலமான நெருக்கடியை கொடுத்து வருகிறது. மம்தாவின் ஆட்சியை கலைக்கப் பார்க்கிறது.

ஆகவே பாஜகா ஆர் எஸ் எஸ் திட்டம் என்பது எல்லா மாநிலத்திலும் உள்ள மாநில கட்சிகளை ஒழித்துவிட்டு , இந்தி தேசிய கட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்பது தான். அப்போது தான் மக்களின் மொழியை, பண்பாட்டை, இயற்கை வளத்தை, நில உரிமைகள் என அனைத்தையும் எளிதாக அழிக்க முடியும். ஒரு மிகப்பெரிய பண்பாட்டு இனப்படுகொலையை இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மீது நிகழ்த்த ஆர் எஸ் எஸ் அணியமாகிக் கொண்டு வருகிறது என்பது மட்டும் உறுதி. தமிழ் மக்கள் இந்த திட்டத்தை தடுக்கவில்லை எனில் தமிழ் மண்ணில் தமிழர்கள் அகதிகளாக வாழ நேரிடும். விழிப்புடன் இருப்போம். வருமுன்காப்போம்


ஊனமுற்ற தமிழ்ப் பெண்களின் சாதனை. கொடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறக்கட்டளை தொடங்கினர் !!

தசை எலும்பு தளர்வு நோயினால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரு தமிழ்ப் பெண்கள் தாங்கள் அனுபவித்து வந்த வேதனையை உணர்ந்து இதே போல கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு மருத்துவமனையை தொடங்கியுள்ளனர் . கை கால்கள் நன்றாக இருக்கும் நபர்கள் கூட இது போன்ற முயற்சியை மேற்கொள்ளாத நிலையில் நடக்க முடியாத இவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. 

மேலும் இவர்கள் பெரு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவதை அறம் சார்ந்து தவிர்த்தும் வருகின்றனர். மண்ணை மலடாக்கி , ரசாயன உரத்தை கொண்டு பெரு நிறுவனங்கள் உணவுகளை தயாரித்து வருவதை இவர்கள் ஏற்கவில்லை. ரசாயன உரங்களே இது போன்ற அரிய நோய்க்கு காரணம் என்று கூறுகின்றனர் இந்த தமிழ்ச் சகோதரிகள். நம்பிக்கையூட்டும் இவர்களின் பேச்சைக் கேளுங்கள். நமக்கும் நம்பிக்கை பிறக்கும்.  இப்படியான முயற்சிக்கு நாமும் நம் ஆதரவை வழங்குவோம் 

இன்றைய காலகட்டத்தில், உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்தாலும் , தமிழர்களிடையே தமிழ் பயன்பாடு குறைந்து வருகிறது. இதை உணர்த்தும் விதமாக "தமிழர் பண்பாட்டு நடுவம்" ஒரு காணொளித் தொகுப்பொன்றை வெளியிடவுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் தங்கள் ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்.

நீங்கள் செய்யவேண்டியது , நாங்கள் தரும் ஒரு வசனத்தை உங்கள் வட்டார பேச்சு வழக்கில் பேசி, அதை ஒரு காணொளிக் காட்சி ( video ) வடிவில் எங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதை தொகுத்து ஒரு முழுக் காணொளியாக நாங்கள் வெளியிடவுள்ளோம். உதாரணத்திற்கு, கோயம்புத்தூரில் ஒருவர் பேசும் ஒரு வசனத்தை சென்னை வாசி வேறு விதமாக பேசுவார். இவ்வாறு நாம் கொடுக்கும் வசனத்தை,உங்கள் பெயர், நீங்கள் வாழும் மாவட்டம் அல்லது நாடு என்பதையும் குறிப்பிட்டு, உங்கள் முகம் தெளிவாக தெரியுமாறு, முடிந்தவரை ஒலித் தெளிவோடு அனுப்பி வையுங்கள்.

உங்களுக்கான வசனம்:

" உலகத்தில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர்களிடையே தமிழில்தான் பேச வேண்டும்".

இதற்கான கால அவகாசம் 05.12.2014.
உங்கள் காணொளியை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் - vattaramozhi@gmail.com
மேலதிக விபரங்களுக்கு - 0091 9551882647

தமிழில் பேசுவோம், தமிழராய் இணைவோம்.

[vuukle-powerbar-top]

Recent Post