Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆர்.எஸ். எஸ் அமைப்பு தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழனுக்கு விழா எடுப்பது தமிழர்கள ஏமாற்றும் நயவஞ்சக வேலை !

ஆரிய இந்துத்வா தீவிரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்தி, சமஸ்கிருத மொழிகளை தேசிய மொழியாக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பவர்கள். மேலும் தமிழ் மொழியே கோவில்களில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் எதிர்ப்பவர்கள். கோவில் கருவறையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையும் இவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழை புறக்கணித்து, தமிழினத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஆர் எஸ் எஸ் அமைப்பானது இப்போது மாமன்னர் இராசேந்திர சோழனுக்கு விழா எடுப்பது தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் நடவடிக்கை ஆகும். ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் பாஜக அரசு எல்லா தளங்களிலும் இந்தியை , சமஸ்கிருத மொழியை அதிவேகமாக திணித்து வருகிறது. இந்தி அல்லாத அனைத்து தேசிய மொழிகளையும்  அழித்து வருகிறது. இந்தியாவில் இந்தி தேசிய இனத்தை தவிர வேறு எந்த தேசிய இனங்களுக்கும் இல்லை என்று கூறி வருகிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டி விட்டு இந்தியாவில் இந்தி தேசியத்தை அமைக்க முனைந்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். இப்படியான மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் தமிழர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு தமிழர்களின் அடையாளமான இராசேந்திர சோழனுக்கு விழா எடுப்பது முரணானது. மேலும் தமிழர்கள் அனைவரும் சாதி மத பேதமில்லாமல் பழகி வரும் நிலையில் தமிழிடையே இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற பிரிவினையை தூண்டி விடுகிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. இதை தமிழர்கள் ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள்.

இராசேந்திர சோழன் தமிழர் மதமான சைவ மதத்தை சார்ந்தவர் . அவர் ஆரிய இந்து மதத்தை சார்ந்தவர் அல்ல. ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பு சோழர்களையும் ஆரிய இந்துக்களாக சித்தரிக்க நினைப்பது பிழையானது . இது தமிழர்களை இழிவு செய்வது போலாகும். தற்போது தமிழர்கள் தேசிய இனமாக ஒன்றினையும் காலத்தில் தமிழர்களிடையே கலகத்தை மூட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படியான விழாவை முன்னெடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்னெடுக்கும் இராசேந்திர சோழன் ஆயிரமாவது விழா என்ற மக்களை ஏமாற்றும் பரப்புரையை தமிழர்கள் யாரும் நம்பவேண்டாம் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் மக்களை கேட்டுக் கொள்கிறது .



தமிழ்த் தாய் உவந்து பெற்றெடுத்த இருபெரும் சான்றோர்கள். உலகப் பொதுமறை வழங்கிய வள்ளுவரும், உலகப் பொதுநெறி வழங்கிய வள்ளலாரும்.



[vuukle-powerbar-top]

Recent Post