Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடி அரசின் அடுத்த சர்வாதிகார நகர்வு : அனைவருக்கும்  கட்டாய ராணுவப் பயிற்சி !

சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினரால் வைக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பாஜக கட்சி வரவேற்பு அளித்தாலும் நிதிப் பிரச்சினை காரணமாக இந்த சட்டம் நிறைவேறவில்லை. எனினும் சிறிது சிறிதாக நாட்டு மக்களிடம் இந்த சட்டத்தை புகுத்தி விட வேண்டும் என்பதை பாஜக அரசு வலியுறுத்தி உள்ளது. மற்ற நாடுகளை போல இந்தியா என்பது ஒற்றை தேசமாக இருந்தால் இத்தகைய சர்வாதிகார சட்டத்தை பின்பற்றலாம். ஆனால் இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு என்பதை நடுவண் அரசு மறந்து விட்டது. இப்படியான திட்டம் மாநில சுயாட்சிக்கும் எதிரானதாகும். நேரடியாக மாணவர்களை இந்திய அரசின் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரும் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் ராணுவப் பயிற்சி என்பது எந்த மொழியில் வழங்கப்படுகிறது ? யார் அதை வழங்குகின்றனர்? சிங்கள ராணுவத்தோடு கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தில் சிங்கள ராணுவத்தை கொண்டு வந்த அரசு தானே இந்திய அரசு. இந்தியை நாட்டு மக்களிடம் கட்டாயம் திணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது . ஏற்கனவே சாரணர் பயிற்சிகள் இந்தியில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது . இந்திய ராணுவம் முழுவதும் இந்தி மயமாக்கப்பட்ட ராணுவம் ஆகும் . இந்தி ராணுவத்தின் கீழ் தமிழ் பிள்ளைகள் இயங்குவது ஏற்க முடியாது . மேலும் மக்கள் நாயக நாட்டில் அனைவருக்கும் கட்டாய ராணுவ சீருடை அணிவித்து போர் பயிற்சியை கொடுப்பது மக்கள் விரோத செயலாகும் . இதை மாநில அரசுகள் அனுமதிக்கப் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மக்களை தான் ராணுவப் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். வேற்றின மக்களை தமிழகத்தில் உள்ள ராணுவ முகாமில் சேர்க்கக் கூடாது என்பதை நாம் உறுதி செய்தல் வேண்டும் .  


[vuukle-powerbar-top]

Recent Post