Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உடற்கூறு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு. மோடிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் ! (For English scroll down)

பிள்ளையார் என்பது ஒரு தத்துவ மெய்யியல் குறியீடு என்பதை இந்திய மக்கள் பெரும்பாலும் அறிவர். யானை உருவம் என்பது தெள்ளிய அறிவின் குறியீடாகும். இதற்கான விளக்கத்தை ஒளவையார் எழுதிய 'விநாயகர் அகவல்' என்னும் நூலிலும் காணலாம். இந்துக்கள்  யாரும் பிள்ளையார் என்று ஒருவர் யானை முகத்தோடு வாழ்ந்துள்ளார் என்று நம்பவில்லை. ஏன் , சிறுவர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள். அது போலவே தான் ஐயனார், முனிஸ்வரன் போன்ற கடவுளர்களை எல்லாம் ஒரு குறியீடாகவே மக்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். தமிழ்க் கடவுளான முருகனுக்கும் ஆறு தலைகள் பன்னிரண்டு கைகள் இருப்பதாக படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையில் ஒரு மனிதன் பன்னிரண்டு கைகளுடன் வாழ்ந்து வந்துள்ளான் என்று பொருளல்ல. அப்படி யாரும் வாழ்தல் முடியாது. கடவுளர்களுக்கு இயற்கை விளக்கமாகிய தயவு பெருங்கருணையாக மேலோங்கி உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சித்தர்கள் இப்படியான உருவங்களை குறியீடாக அமைத்தனர். 

விலங்குகள் முகத்தோடு யாரும் வாழ்தல் முடியாது. இருப்பினும் மெய்யியல் தத்துவங்களை மக்களுக்கு உணர்த்த விலங்குகளின் தலையை மனித உடம்புகளுடன் இணைத்து சித்தரித்து மக்களை வழிபடச் செய்துள்ளனர் சித்தர்கள். மேலும் யானை போன்ற மிருகங்கள் எந்த துன்பத்திற்கும் ஆளாகக் கூடாது, வேட்டையாடப்படக்கூடாது  என்பதற்கும் இவ்வாறு யானைக் கடவுளை உருவாக்கி உள்ளனர். 

பிள்ளையாரின் பின்னணியில் இவ்வாறான இயற்கை சார்ந்த காரணங்கள் இருக்க மோடி போன்ற தலைவர்கள் உண்மையில் யானை முகத்தோடு ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு யானையின் தலையை எடுத்து மனிதக் குழந்தையின் உடம்போடு ஒட்டியுள்ளனர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்று மோடி கூறியுள்ளது அவரின் அறியாமையை காட்டுகிறது. இது இந்து மதத்தையே அவர் அவமானப்படுத்தும் செயலாகும். உலகத் தலைவர்களில் ஒருவராக மோடி இருக்கும் நிலையில் இப்படியான பிழையான கருத்துகளை மோடி கூறுவது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பெருத்த அவமானத்தையே தேடித் தரும் என்பதை இந்துத்வா ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மோடிக்கு எடுத்துக் கூற வேண்டும்.  

Modi should be awarded Nobel Prize as he found out the truth that it was plastic surgeons who fixed Ganesa's head with human body.  

Indian Prime Minister said 

"We worship Ganesha. There must have been some plastic surgeon at that time who put an elephant’s head on the body of a human being and began plastic surgery." 

Vinayaka worship is a philosophical representation of ascetic spiritual powers. Elephant is considered to be an animal with great wisdom and therefore Siddhas created this Elephant headed God as a representation of yogic wisdom. But Modi says that really an Elephant headed God existed on earth. This clearly shows Modi's lack of knowledge in understanding Hinduism. Tamil God Murugan is represented with six heads and twelve hands. Does it mean that really a man existed with twelve hands? Siddhars wanted to project that Gods have immense compassion and wisdom and therefore personified Gods with several hands and heads. RSS fundamentalists should understand the philosophical meaning behind the mythological images of Hindu deities and teach Modi about this . Otherwise Modi will keep on blabbering like this and bring shame to his own religion. 

To know more about the truth behind Vinayaka worship please see this video https://www.youtube.com/watch?v=9gijDMTfJW4

To Stop India being a laughing stuff, Modi must stop talking about science, medicine and history of India or the world....don't make India a Laughing stuff. 

[vuukle-powerbar-top]

Recent Post