Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிங்கள அரசை விட இன வெறி கொண்ட அரசு இந்தி அரசு. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்களை இந்திய தொடர்வண்டி வாரியம் நிராகரித்து உள்ளது.

தொடர்வண்டி வேலை வாய்ப்புகளில் இந்தி இனத்திற்கு அதிக சலுகைகள் வழங்கி வரும் இந்தி அரசு , இப்போது திட்டமிட்டு தமிழர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பதற்காக தமிழர்களை விண்ணப்பங்களை ஏற்க மறுத்துள்ளது. அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம் மிக அற்பமானதே. சான்றிதழ் ஒப்பம் இல்லை என்ற காரணத்தை சுட்டிக் காட்டி விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது. தமிழகத்தில் இயங்கும் தொடர்வண்டித் துறையில் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பதில் இந்தியர்கள் பெருமளவில் அந்த வேலைக்கு அமர்த்தி வருகிறது . இதனால் தமிழகத்தில் இந்தி மக்களை அதிக அளவில் குடியேற்றம் செய்து வருகிறது இந்தி அரசு . தமிழகம் ஒரு கலப்பின தாயகமாக உருமாறி தமிழர்கள் சொந்தநாட்டில் அகதிகளாக மாற வேண்டும் என்பதே இந்தி அரசின் திட்டமாக உள்ளது . 

தமிழ் நாட்டில் இயங்கும் நடுவண் அரசு துறைகள் அனைத்திலும் தமிழர்களுக்கே முழு  வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் நியாயமான கோரிக்கையாகும் . தமிழக அரசு தமிழர்களுக்கான அரசாக செயல்பட்டு , நடுவண் அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமையும் அதிக அளவில் வேலைவாய்ப்பும் (குறைந்தது 90%) கொடுத்திட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகளும் இந்தி அரசை கண்டிப்பதுடன் தமிழர்களுக்கு நடுவண் அரசு பணிகள் கிடைக்க குரல் கொடுக்க வேண்டும். தமிழர் நாட்டில் இயங்கும் தனியார் துறைகளுக்கும் தமிழக அரசு ஆணை பிறப்பித்து தமிழர்களுக்கே தனியார் வேலை வாய்ப்புகளின் முன்னுரிமை வழங்குமாறு செய்தல் வேண்டும். இந்த கோரிக்கையை நாம் அனைவரும் அரசுக்கு வைப்போம் .  
[vuukle-powerbar-top]

Recent Post