Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'யாத்ரி நிவாஸ்' என்ற சமஸ்கிருத பெயரை மாற்ற இயலாது. தமிழக அரசு அறிவிப்பு ! தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் ! 

திருவரங்கத்தில் உள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரி நிவாஸ் என்ற சமஸ்கிருத பெயரை தமிழக முதல்வர் ஜெயலலிதா சூட்டியுள்ளார். இதை தமிழில் மாற்ற வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் அரசுக்கு கோரிக்கை வைத்தது . இந்த கோரிக்கையை அதிகாரிகளுக்கு அரசு அனுப்பி வைத்தது. கோரிக்கைக்கு பதில் அளித்த அரசு அதிகாரிகள் சமஸ்கிருத பெயரை தமிழ் மாற்ற இயலாது , காரணம் அது தமிழக முதல்வரே வைத்த பெயர் என்று கூறியுள்ளனர். இதை விட ஒரு பெரிய அவமானம் தமிழகத்திற்கு இருக்குமா ? தமிழ்நாட்டில் தமிழில் தான் தமிழக முதல்வர் பெயர் வைக்க வேண்டும்? வடமொழியில் ஏன் பெயர் வைக்க வேண்டும். தமிழில் பெயர் வையுங்கள் என்று தமிழர்கள் கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கையை நிராகரித்து உள்ளது தமிழக அரசு. இது உண்மையில் தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு அவமதிப்பை தேடித் தரும் செயலாகும்.  இத்தகைய பொறுப்பில்லாத பதிலுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

இனி வரும் காலத்திலாவது தமிழக முதல்வர் யாராக இருந்தாலும் எல்லா திட்டங்களுக்கும் தமிழ் மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். இல்லையென்றால் காலமெல்லாம் வேற்று மொழிகளே தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும் . தமிழ் மெல்ல தன்னுடைய இடத்தை இழக்கும். தமிழ் மண்ணை ஆட்சி செய்யும் வேற்றின மக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post