Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அன்னைத் தமிழை வணங்குகின்றேன். திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு  எந்த பெருமையும் இல்லை. தமிழுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் - சென்னையில் தருண் விஜய் பேச்சு !!

இன்று சென்னை வந்திருந்த உத்தரகாண்டம் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழுக்காக அவர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காரணத்தால் அவருக்கு வைரமுத்து அவர்களின் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் சிறப்பான நன்றி கூறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரு ஒளவை நடராசன், முனைவர் அறவாணன் மற்றும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் தருண் விஜய் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஒட்டுமொத்த தமிழர்களின் ஒற்றை கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதாகும். கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ் மொழி வடநாட்டில் கற்றுத் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை உடனே ஏற்ற தருண் விஜய் உத்தரகாண்டத்தில் அவரது தொகுதியில் தமிழ் மையம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று கூறினார். மேலும் அவரது மாநிலத்தில் திருக்குறளை வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். தமிழ் மொழி நிச்சயம் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நாம் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் தருண். அதற்காக தான் எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்வதாக கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை. திருக்குறளே இந்தியாவின் தேசிய நூல் என்றும் அறிவித்தார்.

தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பில் நாம் அவருக்கு நன்றி தெரிவித்தோம், மேலும் தமிழர்களின் முதன்மையை கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவரிடம் கொடுத்தோம். அக்கோரிக்கையின் நகலை நடுவண் அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் கொடுத்தோம்.

Dear Mr. Tarun Vijay,

Greetings from Tamil Community. We were extremely delighted when we heard that you voiced for Tamil language in the Parliament. We also conducted a press meet here at Chennai specially to thank you on behalf of Tamil people. Though our Tamil language is ancient and has lofty literature, it did not get it's due recognition in international arena. Tamils lost ground in their very land due to the dominance of Hindi and English . It is all because Tamil is not recognised by the Indian Government. If Tamil Language was made the official language of India, by now Tamil language would have developed in leaps and bounds. Tamils pride would have reached new heights. As you are the only political leader in northern India who is voicing for Tamil language, we Tamils request you to take our following demands to the Centre.

1. To bring forward a resolution in the Parliament to make Tamil as the official language of   Indian Union.
2. Make Thirukural as the national book of India.
3. Tamil should become the official language in all Central Government offices in Tamil Nadu.
4. To take up Tamil to new heights, we ask GOI to include Tamil language in Stamps, Coins and in Passport so that even foreigners would know about the importance of our language.
5. Equal treatment to our language and to our people at par with Hindi and Hindi speaking people.

These are the genuine demands kept forward by the Tamil people. We humbly request you take up these demands personally to the centre and fulfill our long pending dream. If these demands are achieved, you will always remain in the hearts of millions of Tamil people and also in the glorious history of Tamils.

Thanking you,
Yours in friendship,

Rajkumar Palaniswamy



[vuukle-powerbar-top]

Recent Post