Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

https://www.youtube.com/watch?v=5XgGHA47Eg4&list=UUWa1Xp2hI8YbhY87nj3wAmg

தமிழ் இசை மரபுக்கும் கர்நாடக இசை மரபுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் பல தமிழர்களுக்கு தெரியவில்லை. இந்தியாவில் தோன்றிய எல்லா இசை மரபுக்கும்  ஆதாரமாக விளங்குவது தமிழிசையே என்பதை தமிழிசை முனைவர் திரு. நல்லசிவம் அவர்கள் தெளிவாக விளக்குகிறார். தஞ்சை பல்கலையில் பேராசிரியராக பணிபுரியும் நல்லசிவம் ஏன் நாம் தமிழிசையை கைவிட்டோம், எவ்வாறு நாம் அதை மீட்டெடுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார். தமிழிசையை மீட்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழிசையை மறந்த தமிழர்கள் தங்கள் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்பதை நாம் உணர்தல் வேண்டும் . புரியாத கர்நாடக இசையில் மதிமயங்கி ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே கர்நாடக இசையை கற்றுக் கொள்ளும் நிலையில் , நம் தமிழ் இசை எல்லோருக்கும் பொதுவானது , இயல்பானது , இயற்கையானது என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கு தமிழிசையை கற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் .

பண்பாட்டு சுற்றுலா சென்ற போது நாங்கள் தமிழ்ப் பல்கலையில் மெய்யியல் துறையை சேர்ந்த திரு நல்லசிவம் அவர்களை பேட்டி  எடுத்தபோது  இந்த காணொளி படமாக்கப்பட்டது . 
[vuukle-powerbar-top]

Recent Post