Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

1. மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்தின் எந்த பகுதிகள் கேரளாவிற்கு நாம் இழந்தோம் ?

2. கச்சத்தீவு இலங்கைக்கு எந்த பிரதமரால் தமிழகத்தில் இருந்து தாரை வார்த்துக் கொடுக்கபட்டது ? எந்த ஆண்டில் கொடுக்கப்பட்டது ?

3. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் போது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து இலங்கை அரசுக்கு முழு ஆதரவு வழங்கியவர் யார் ?

4. ஈழத்தில் மிகவும் தொன்மையான முருகன் கோவில் மற்றும் சிவன் கோவிலின் பெயர்கள் என்ன ?

5. ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்பின் போது மிகக் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட ஈழத்து பெண் செய்தி வாசிப்பாளர் பெயர் என்ன ?

6. தமிழகத்தை  இது வரை ஆட்சி செய்த தமிழர் அல்லாத முதல் அமைச்சர்களை பட்டியலிடுக ..

7. தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழியான ஆண்டு எது ?

8. இந்தியாவில் உள்ள  ஒரு மாநிலம் / இந்திய ஒன்றிய பகுதியில் தமிழ் மொழியில் நாணயம்  வெளியிடப்பட்டது . அது எந்தப் பகுதி ?

9. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதலில் உயிர் நீத்த போராளி யார் ?

10. இந்திய அரசியல் சாசனத்தில் எந்தனை மொழிகள் பட்டியல் மொழிகளாக இடம் பெற்றுள்ளது ? எத்தனை மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளது ?

11. தமிழ் நாடு என்ற பெயர் வருவதற்கு பட்டினிப் போராட்டம் நடத்தி தன்னுடைய உயிரை நீத்த போராளி யார் ?

12. தமிழ் மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூறிய முஸ்லீம் தலைவர் யார் ?

13. இது வரை சுமார் எத்தனை தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர் ?

14. தமிழின அழிப்பில் இந்தியாவின் போரை தான் நாங்கள் நடத்தினோம் என்று சொன்ன சிங்கள அரசியல் தலைவர் பெயர் என்ன ?

15. சிங்கள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தமிழகத்தில் வைத்து பயிற்சி கொடுத்தது . இந்த பயிற்சி நிலையம் தமிழகத்தில் எங்கு உள்ளது ?

16 எந்த நூற்றாண்டில் இருந்து தமிழகத்தை தெலுங்கு மக்கள் ஆட்சி செய்து வருகின்றனர் ?

17. தமிழகத்தில் மொத்தம் எத்தனை விழுக்காடு தமிழர்கள் உள்ளனர் ?

18. தமிழில் ஆங்கிலம், சமஸ்கிருதம் சொற்களை கலக்காமல் இருக்க தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த இரு தமிழ் அறிஞர்கள் யார் ?

19. கர்நாடக இசையின் ஏழு ஸ்வரங்களுக்கு (ஒலிகளுக்கு ) தமிழிசையில் வழங்கப்படும் பெயர்கள் என்ன ?

20. கச்சத்தீவு எந்த தமிழ் மன்னரின் சமஸ்தானத்திற்கு சொந்தமானது ?
21 . சிங்கப்பூரில் உள்ள பிரபல கல்வி நிலையில் திருவள்ளுவருக்கு உலகின் சிறந்த ஞானி என்ற பட்டதுடன் சிலை வைக்கப்பட்டுள்ளது . அந்த கல்வி நிலையத்தின் பெயர் என்ன ?

















[vuukle-powerbar-top]

Recent Post