Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

500 ஆண்டுகளாக தொடரும் மூட நம்பிக்கைக்கு அனுமதி . 5000 ஆண்டுகளாக தொடரும் வீர விளையாட்டுக்கு தடை ! இது தான் இந்திய நீதி ! 

கர்நாடகாவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி ஆலயத்தில் பிராமணர்கள் சாப்பிட்ட இலையின் மீது  பிராமணர் அல்லாதவர்கள் வெறும் உடம்போடு படுத்து உருள வேண்டுமாம். அப்படி செய்தால் அவர்களை பிடித்துள்ள நோய்கள் எல்லாம் நீங்கி விடுமாம். இது தான் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் மதமூட நம்பிக்கையாகும். இந்த நடைமுறை காட்டுமிராண்டித்தனம், மூடநம்பிக்கை என்று கர்நாடக அரசே ஒரு காலத்தில் தடை விதித்தது. இருப்பினும் இந்த மூடநம்பிக்கை ஆதரவாளர்கள் இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும், இது 500 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது, இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விடயம் , இதை தடை செய்வது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று நீதி மன்றத்தில் வாதித்தனர். இந்த வாதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்து இந்த விழா தொடர அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டும் சுப்பிரமணியன் கோவிலில் இந்த இலையின் மேல் உருளும் மூடநம்பிக்கை திருவிழா காவல்துறையின் பாதுகாப்புடன் நடைபெற்றது . 

ஆனால் தமிழர்கள் 5000 ஆண்டுகளாக பின்பற்றி வரும் தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிகட்டுக்கு 2014 மே மாதத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த விளையாட்டில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எல்லா விதிமுறைகளையும் கடைபிடித்து நடத்தப்படும் ஏறு தழுவுதல் விளையாட்டின் மேல் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தும் இது வரை அக்கோரிக்கையை அரசோ, நீதிமன்றமோ ஏற்கவில்லை . இன்னும் சல்லிகட்டுக்கு தடை உள்ளது. இந்த தடையை மீறி சல்லிகட்டு நடத்த முடியுமா அல்லது நாம் நடத்தப் போகிறோமா என்பது கேள்விக்குறி. அப்படி நடத்தினால் தமிழகக் காவல்துறை தமிழ் மக்களின் மேல் வன்முறையை ஏவி விடுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.

நம்முடைய கேள்வி , ஒரு மேல்சாதி இந்துக்களின் புனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மூடநம்பிக்கை சார்ந்த விழாவிற்கு  நீதிமன்றமும், அரசும் அனுமதி அளிக்கிறது. ஆனால் தமிழர்களின் அன்பை, பண்பை , வீரத்தை உறுதிப்படுத்தும் தமிழர்களின் பண்பாட்டு விளையாட்ட்டான சல்லிகட்டை ஏன் நீதிமன்றமும் அரசும் தடை விதிக்கிறது? மூடநம்பிக்கைக்கு அனுமதி அளிக்கும் அரசு தமிழர் பண்பாட்டிற்கும் அனுமதி வழங்க ஏன் தயங்குகிறது? காரணம் நாம் தமிழர்கள் என்பதாலா ? தமிழர் பண்பாடு நீடிக்கக் கூடாது என்பதலா ? 

தமிழர்களின் வீரவிளையாட்டை எப்படியாயினும் தொடர்ந்து நடத்தி விட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது . இதை கருத்தில் கொண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையின் போது சல்லிகட்டு விளையாட்டு வழக்கம் போல நடைபெற அரசு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமாறு தமிழ்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 




[vuukle-powerbar-top]

Recent Post