Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் போராட்டங்களையும், தமிழ்த் தேசிய எழுச்சியையும் மழுங்கடிக்கும் உத்தியே இந்திய தேசிய மனிதக் கொடி நிகழ்ச்சி !!

அண்மையில் சர்வதேச ரோட்டரி சங்கமும், நியூஸ் 7 செய்தி ஊடகமும், மற்றும் பல பெரு நிறுவனங்களும் இணைந்து  இந்திய தேசிய மனிதக் கொடியை சென்னையில் உருவாக்கி கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்கள். இப்படியான சாதனை ஏன் நிகழ்த்தப்படுகிறது , இதன் பின்னணி என்ன , எதற்காக தமிழகத்தில் நிகழ்த்தப்பட வேண்டும் என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் எப்போதும் இல்லாதவாறு உரிமைப் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் போராட்டங்கள் தமிழகத்தில் தான் நடத்தப்படுகிறது. தமிழ்த் தேசிய கட்சிகளும், அமைப்புகளும், மாணவர்களும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நாள்தோறும் போராட்டம் நடத்திய வண்ணமே உள்ளனர். தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, மாநில அதிகார உரிமை , நீர் உரிமை என அனைத்தும் இந்திய அரசு திட்டமிட்டு பறித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் முழு வீச்சில் தமிழகத்தில் நடைபெறுகிறது. இது இளம் தலைமுறையை சிந்திக்கச் செய்துள்ளது. இப்படியே இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தமிழகம் தன்னுடைய உரிமைகளை பெற கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும் அது இந்திய அரசின் ஒற்றை ஆட்சிக்கு பங்கம் விளைவித்து விடும் என்ற அடிப்படையில் தான் இந்த மனிதக் கொடி நிகழ்ச்சி திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 55000 இளைஞர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் இவ்வளவு பெரிய கூட்டம் வேறு எந்த நிகழ்ச்சியிலும் கூடாது.

2009 ல் ஈழத்தில் இந்தியாவின் ஒத்துழைப்போடு நடந்த இனப்படுகொலை நடந்தது. அப்போது இவ்வளவு இளைஞர்கள் சென்னையி கூடியிருந்தால் இரண்டு இலட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

இவ்வளவு பெரிய கூட்டம் சென்னையில் கூடினால் வேறு என்னென்ன செய்ய முடியும் ..
மீத்தேன் எரிவாயுவை எடுத்து தஞ்சை மண்ணை பாலைவனமாக்க இந்திய அரசு துடிக்கிறது. இந்த அபாயகரமான திட்டத்தை தடுத்து நிறுத்தலாம்.

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி இந்தித் திணிப்பை முற்றிலும் தடுத்து நிறுத்துவதோடு  தமிழர்களுக்கும் சம உரிமையை பெற்றுக் கொடுக்கலாம்.

காவிரி, முல்லைப்பெரியாறு உரிமைகளை நிலைநாட்டி தமிழக விவசாயிகளுக்கு நீதியையும் நிம்மதியும் பெற்றுத் தந்திருக்கலாம்.

தமிழக சிறையில் ஏழு அப்பாவி தமிழர்கள் 21 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தரலாம்.

தமிழ்நாட்டில் மாநில சுயாட்சியை நிலைநாட்டி இந்திய அரசின் கோரப்பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றலாம். தமிழக அரசை தன்னாட்சி பொருந்திய அதிகாரமிக்க அரசாக மாற்றலாம்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை முற்றிலும் தடுத்து நிறுத்தலாம்.

இந்திய அரசை அடிபணிய வைத்து கட்சித் தீவை மீட்கலாம்.

இலங்கை தூதரகத்தை தமிழக மண்ணில் இருந்து அப்புறப்படுத்தி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

ஈழத் தமிழர்கள் விடயத்தில்  இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க வைக்கலாம்.

இப்படியாக பல உரிமைகளை, நீதியை தமிழ் மக்கள் பெற்றிட இளைஞர்களின் ஒன்றுகூடலால் சாத்தியப்படும். ஆனால் அதை முற்றிலும் மழுங்கடித்து தமிழர்களுக்கு எந்த வித தன்மான உணர்வும், போராட்ட உணர்வும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தமிழகத்தை கூறுபோடும்   இந்திய பெருநிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்த மனிதக் கொடி நிகழ்வு என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இந்த சதித்திட்டத்திற்கு பலியானவர்கள் தான் தமிழக இளைஞர்கள்.











[vuukle-powerbar-top]

Recent Post