Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆர்.எஸ்.எஸ். உதவியுடன் கல்வி முறையை மாற்றியமைக்க  பாஜக அ
ரசு 

முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்துள்ளது. தற்போதுள்ள கல்வித் திட்டத்தை முழுமையாக மாற்றி கட்டாய இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு , குருகுல கல்வி போன்ற அமைப்பு, வேத நெறி பாடங்கள் என்று பல்வேறு அதிரடி கல்வி திட்டங்களை பாஜக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. மேலும் கல்வியை மாநில, பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி நடுவண் அரசின் கீழ் முழுமையாக கொண்டுவரும் முயற்சியும் நடந்து வருகிறது.

இதை நாம் தொடக்கத்திலேயே எதிர்க்க வேண்டும். கல்வித் திட்டம், பாடத்திட்டம் அனைத்தும் மாநில அரசுகளே வடிவமைக்க வேண்டும். நமது கல்வி நமது பண்பாட்டை, வாழ்வியலை பறைசாற்றும் கல்வியாக இருத்தல் வேண்டும். ஆரியம், இந்தியம் தழுவிய கல்வியாக அது இருத்தல் கூடாது. ஏற்கனவே தமிழக அரசின் பாடத்திட்டத்தில் தமிழர் வரலாறு இல்லாத நிலையில் நடுவண் அரசு பாடத்திட்டத்தில் ஒரு சிறிதும் தமிழர் பண்பாடு என்பது இருக்காது. நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டுமெனில், நாம்  கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி முழுமையாக மாநில அரசின் கீழ் கொண்டு வர போராட வேண்டும். அது ஒன்று தான் நீண்ட காலத்திற்கு இந்திய அரசிடம் இருந்து நம் தலைமுறையை காப்பாற்றும் செயல்திட்டமாக அமையும். எந்த வகையிலும் ஆரியத்திற்கு நாம் அடிமையாக விடக்கூடாது.



[vuukle-powerbar-top]

Recent Post