Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருக்குறள் உறுதி ஏற்பு !! 

ஈனமுத்து பெருமாள் அவர்களின் மகனாகிய பாலாஜி என்கிற நானும், மகாலிங்கம் அவர்களின் மகளாகிய மணிமாலா என்கிற நானும் இல்லற வாழ்வில் இணையும் பொருட்டு தமிழர் மறையான பொய்யா மொழியாம் திருக்குறள் சாட்சியாக கீழ்க்கண்ட உறுதி மொழி ஏற்கிறோம். 

ஐயன் திருவள்ளுவர் முன்மொழிந்த வாழ்க்கை நெறிப்படி, 

அன்பு, இறக்கம், கருணை, விருந்தோம்பல், ஒழுக்கம், அடக்கம், வாய்மை, தூய்மை, பெரியோரை மதித்தல் ஆகிய இல்லற அறங்களை பேணி 

பொறாமை, வெகுளி, பேராசை, பிறன் பொருள் விழைதல், இன்னா செய்தல், கயமை, சிற்றினம் சேர்தல் போன்ற தீக்குணங்களை பற்றாமல் 

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலில் குறிப்பிட்ட அனைத்து நன்னெறிகளின் படியும் நாங்கள் சார்ந்த இந்த தமிழ் இனத்திற்கும், தமிழ் மண்ணுக்கும், எங்கள் முன்னோருக்கும் பெருமை சேர்க்கும் படியும், 

எக்காலத்தும், எந்நிலையிலும், எத்துணையும் வள்ளுவர் வகுத்த நெறி பிறளாமல் வையத்து வாழ்வாங்கு வாழவும், 

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது "

என்ற காலத்தால் அழியாத திருக்குறளின் பொருளுக்கு தக்கவாறு வாழவும் இந்த தருணத்தில் இல்லற வாழ்வில் இணைய முழுமனதுடன் உறுதி ஏற்கிறோம்.   

வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழ் மொழி ! 




[vuukle-powerbar-top]

Recent Post