Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் ஊடகவியலாளர்களை ஆந்திர காவல்துறை தாக்கியது பெரும் வருத்தத்தை தந்தாலும் ஒரு புறம் ஆறுதலையும் தருகிறது.

சன் செய்திகள், புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடங்கங்கள் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு கங்காணி வேலை செய்யும் விதமாக "இந்தியா ஒரே தேசம், இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம், நம்மெல்லாம் இந்தியர்கள்" என்று தமிழ் மக்களிடம் மூளைச்சலவை செய்து வந்தன. தமிழ்த் தேசியத்தின் குரலாக இந்த ஊடகங்கள் ஒலிக்க மறுத்தன. இப்படியான ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடம் தாம் ஆந்திர காவல்துறையின் தாக்குதல். தமிழர்கள் என்னதான் இந்தியர் இந்தியர் என்று கூப்பாடு போட்டாலும் தமிழர்கள்  எப்போதும்  இந்தியராக முடியாது என்று புரிய வைத்தனர் ஆந்திர காவல்துறையினர். தமிழர்களை தேடித் தேடி அடித்துள்ளனர். தமிழ் பேசினாலே அடி தான் என்ற கொடூர எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் தெலுங்கு காவல்துறை.

தமிழக ஊடகங்கள் இனிமேலாவது பொய்யான இந்திய வேடத்தை கலைத்து விட்டு தமிழ் இனத்திற்கான, தமிழ் மொழிக்கான, தமிழ் மண்ணுக்கான ஊடகங்களாக மாற வேண்டும் . இல்லையெனில் அண்டை மாநிலத்தவர்கள் உங்களை மாற வைப்பார்கள் . 
[vuukle-powerbar-top]

Recent Post