Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேவை மதம் மாற்ற தடை சட்டம் அல்ல, இனம் மாற்ற தடை சட்டம் தான் !!

பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே பல்வேறு மதவாத திட்டங்கள் திணிப்புகளை முன்வைத்தது. இப்போது அதை தொடர்ச்சியாக செய்தும் வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சனைகளை கிளப்பிய வண்ணமே உள்ளது. அண்மையில் மதமாற்ற தடை சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்து  கடும் எதிர்ப்பையும் சந்தித்தது பாஜக அரசு.

மதம் என்பது மனிதர்களின் வழிபாட்டு நெறி. மனிதர்கள் அவர்கள் விரும்பிய வகையில் இறைவனை வழிபாடு செய்ய உரிமை உண்டு. அதனால் மக்கள் அவர்கள் விரும்பிய மதத்திற்கு செல்லவும் உரிமை உள்ளது . அதை ஜனநாயக நாட்டில் யாரும் தடுக்க இயலாது. ஆனால் இனம் என்பது மாறக் கூடியது அல்ல. அதை மாற்றவும் கூடாது. இருப்பினும் இந்துத்துவா சக்திகளும், பாஜக அரசும் இந்தியாவில் உள்ள பல்வேறு இனங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது .

ஒரு இனத்தை எளிதாக எவ்வாறு அழிக்கலாம் ? அந்த இனத்தின் மொழியை அழித்தால் அந்த இனம் தானாகவே அழிந்து விடும். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் வரலாற்றில் உள்ளது. இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக இந்தி இருக்கும் காரணத்தால் அனைத்து தேசிய இனங்களும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்திய அரசு கடந்த நூறு ஆண்டுகளாகவே ஏற்படுத்தி வருகிறது . இந்தி கட்டாய பாடமாக்கப்பட்ட பல மாநிலங்கள் தங்கள் தாய் மொழியை மறந்து வருகின்றன. வடநாட்டில் உள்ள பல இந்தி அல்லாத மாநிலங்கள் இந்தி மொழிக்கு மாறிவிட்டனர் . இந்தி இன மக்களாக தங்களை அடையாளப்படுத்தியும் வருகின்றனர். இந்தியே தங்கள் தாய் மொழி என்று கூறியும் வருகின்றனர் என்பது தான் வேதனை.

தென்னிந்தியாவிலும் இந்தியின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது . இதனால் இந்தியை தாய் மொழியாகக் கொள்ளாத தேசிய இன மக்களும் இந்தி படிப்பது, இந்தி திரைப்படங்களை பார்ப்பது, இந்தி விழாக்களை கொண்டாடுவது , இந்தி தொடர்களை பார்ப்பது என்று இந்தியின் கோரப்பிடியில் ஒவ்வொரு நாளும் சிக்கி வருகின்றனர். இது நாளடைவில் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்துவதாக அமையும். இந்த இனவழிப்பில் மக்கள் இறக்க மாட்டார்கள் , ஆனால் இனம் இருக்காது . அதாவது இன அடையாளம் முற்றிலும் அழிந்துவிடும். இந்தியா முழுவதும் ஒரே இனம், அது இந்தி இனம் தான் என்ற நிலை இந்தியாவில் இன்னும் இருபது ஆண்டுகளில்  நிச்சயம் வரும்.

இதை தடுக்க வேண்டும் என்றால் இனமாற்ற தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் . அதாவது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்துவமான மொழியும் பண்பாடும் உள்ளது . இதை வேறு ஒரு மொழி, பண்பாடு கொண்டு அழிக்க நினைப்பது இனப்படுகொலைக்கு சமமாகும். ஒரு மாநில மொழியை இன்னொரு மாநிலத்தில் எந்த வகையிலும் திணிக்கக் கூடாது என்பதே இன மாற்ற தடை சட்டத்தை பூர்த்தி செய்யும் . அதன்படி இந்தியை எந்த மாநிலத்திலும் திணிக்கக்கூடாது. எல்லா மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் .

ஆனால் இதற்கு தடையாக உள்ளது இந்திய அரசு மட்டும் தான் . இந்தி அரசு தன்னுடைய இன அடையாளத்தை, மொழியை மற்ற  தேசிய இனங்களின் மீது திணிக்க முடியாதபடி ஒரு சட்டம் இயற்றுவதே இனமாற்ற தடை சட்டமாகும். இதை உடனே இந்திய அரசு நிறைவேற்ற மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் . எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை இந்தி மொழியின்  ஆட்சி மொழி தகுதி நீக்கப்பட வேண்டும், எந்த ஒரு தனிப்பட்ட மாநில மொழிக்கும் ஆட்சி மொழி தகுதி வழங்கக்கூடாது. கொடுத்தால் எல்லா மாநில மொழிகளுக்கும் அத்தகுதியை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்தியாவில் உள்ள இனங்கள் வாழும். இல்லையென்றால் இந்தியாவில் உள்ள எல்லா இனங்களும் காணாமல் போகும் . இந்தி இனம் மட்டுமே எஞ்சி நிற்கும் .

இதை கருத்தில் கொண்டு இனமாற்ற தடை சட்டத்தை தேசிய இனங்கள்  கோர வேண்டும் . எல்லா மாநிலங்களும் , தேசிய இனங்களும் இந்தித் திணிப்பை, இந்திப் பண்பாட்டு திணிப்பை  கடுமையாக எதிர்க்க வேண்டும். இது ஒன்று தான் தேசிய இனங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகும் .


the possible human languages are determined by selecting among the options: one choice yields Tamil (more exactly, a specific variety of Tamil), another yields Swahili, etc


Chat Conversation End

One basic problem, then, is to discover the invariant principles of the language faculty and the limited options of variation, and then to show that the possible human languages are determined by selecting among the options: one choice yields Tamil (more exactly, a specific variety of Tamil), another yields Swahili, etc.

ஒரு அடிப்படை சிக்கல் என்னெவெனில் , மொழிகளின் மாற்ற முடியாத இயல்புகளை கண்டுபிடிப்பது மற்றும் சிறிதளவு மாறக்கூடிய தன்மையை கண்டுபிடிப்பதாகும். மனித மொழிகள் இக்காரணிகளை தேர்வு செய்வதின் மூலமாகத் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் காட்ட இயலும். ஒரு தேர்வின் விளைவு தமிழ் மொழியை கொடுப்பதாக உள்ளது மற்றொன்று சுவாஹிலி மொழியை கொடுப்பதாக உள்ளது .    

மனித மொழிகள் சில தேர்வுகளால் தீர்மானிக்கப்படுகிறது

ஒன்று
 




[vuukle-powerbar-top]

Recent Post