Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாரத இரத்தினம் விருதை பெற்ற மதன் மோகன் மாலாவியாவை பாஜக பின்பற்றுவார்களா ?  

அதி தீவிர இந்து தேசியரான மதன் மோகன் மாலாவிய பிராமண மத குடும்பத்தில் பிறந்தவர். இந்து தேசியக் கருத்தியலை விதைத்தவர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் தோன்ற காரணமாக இருந்தவர். இருப்பினும் தலித் மக்களின் ஆலய நுழைவு உரிமைகளுக்காக இவர் போராடினார் என்று வரலாறு சொல்கிறது. தலித் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று இந்து மனுதர்மம் கூறிய போதும், அந்த நிலையை மாற்றிட மந்திர தீட்சை கொடுத்து தலித் மக்களின் தீண்டத்தகாதத் தன்மையை மாற்ற முடியும் எனக் கூறி தலித் மக்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார் மதன் மோகன் மாலாவியா. அவரது எண்ணப்படி மந்திர தீட்சை கொடுப்பதின் மூலமாக ஒருவரின் கீழ்ப் பிறவி என்பது மேல் பிறவியாக மாறிவிடும் என்று உறுதியாக நம்பினார். மந்திரங்கள் தலித் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் என்று கூறியுள்ளார்.

1936 ஆம் ஆண்டு இந்து தலித்துகள் கோவில் நுழைவு போராட்டம் நடத்தினர். அதற்கு மாலாவியா முழு ஆதரவு அளித்தார் . 200 க்கும் மேற்பட்ட தலித் இந்துக்கள் ஆலயம் நுழைய முற்றபட்ட போது அவர்கள் அனைவருக்கும் மந்திர தீட்சை அளித்து அவர்களின் தீண்டத் தகாத தன்மையை விலக்கினார் மதன் மோகன் மாலாவியா . அதன் பின்னர் அனைத்து தலித்துகளும் ஆலயம் நுழைந்து அங்குள்ள இந்து விழாவில் பங்கேற்றனர் என்று வரலாறு சொல்கிறது.

சரி, இப்படிப்பட்ட ஆரிய பிராமணருக்கு பாரத இரத்தினம் விருது கொடுத்தாகிவிட்டது. அவர் வழியை இந்த விருது கொடுத்த பாஜகவினர் பின்பற்றுவார்களா ? சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலி கோவிலில் திராவிட கழகத்தினர் தலைமையேற்று தமிழர்களை கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று ஆலய நுழைவு போராட்டம் நடத்தினார்கள் . அப்போது முதல் ஆளாக கபாலி கோவிலின் வாசலில் நின்று தமிழர்களை வழிமறித்து தடுத்து இதே பாஜகவினர் தான் . வானதி சீனிவாசன் தலைமையில் இந்து அமைப்பினர் தமிழர்கள் ஆலைய கருவறைக்குள் தீட்டு என்று முழக்கமிட்டனர். தீண்டாமையை எவ்வளவு தூரம் தங்கள் தோளில் தூக்கி சுமக்கின்றனர் பாஜகவினர் என்பது இப்போது நமக்கு புரிகிறது. கடவுள் படைப்பில் அனைவரும் சமம் என்றால் ஏன் கருவறைக்குள் பிராமணர் அல்லாதவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது ? ஏன் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் பூசகராக முடிவதில்லை ? தமிழர் கட்டிய கோவிலில் ஏன் தமிழில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது ? இப்படி பல கேள்விகளை தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர் ஆனால் பதில் மட்டும் வரவில்லை.

மதன் மோகன் மாலாவியாவிற்கு பாரத இரத்தினம் விருது கொடுத்து சிறப்பிக்கும் பாஜகவினர் அவர் செய்தது போலவே மந்திர தீட்சை கொடுத்தாவது தமிழர்களை ஆலயத்திற்குள் நுழைய அனுமதிப்பார்களா?











[vuukle-powerbar-top]

Recent Post