Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று நடைபெற்ற புதியதலைமுறை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி இந்து அமைப்புகளின் கீழ் வர வேண்டும் என்று பாஜக , இந்துத்வா அமைப்பினர் கூறினர்.

அதற்கு பதில் அளித்த அய்யநாதன் மற்றும் அருணன் அவர்கள் இந்துக் கோவில்கள் தமிழக அரசின் இந்து அறநிலைத்துறையின் கீழ் ஏன் இருக்க வேண்டும் என்று பல்வேறு சான்றுகளை முன்வைத்தார்கள். நெறியாளர் குணசேகரன் மிகச் சிறப்பாக ஆரிய இந்து அமைப்பினரை கையாண்டார்.

இந்து கோவில்கள் இயங்குவது குறித்து நம்முடைய கருத்து: தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர் சமய கோவில்களும் தமிழர்கள் வசம் தான் இருக்க வேண்டும். அது தமிழக அரசின் இந்து அறநிலைத்துறையின் கீழ் இயங்குவது தான் குறைந்த பட்ச பாதுகாப்பாகும். காரணாம் ஆரிய இந்துத்வாவை முன்வைத்து செயல்படும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சங்க பரிவார், வி.எச்.பி, பஜ்ரங்தால் மற்றும் பிற இந்து மத கட்சிகள் எல்லாம் தமிழர் பண்பாட்டை, தமிழர் மெய்யியலை ஏற்காத கட்சிகளாகும். இவர்களிடம் தமிழர் கட்டிய கோவில்கள் சென்றால் தமிழர் அடையாளங்கள் , தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் மெய்யியல் அழிக்கப்பட்டு ஆரிய இந்துத்வா பண்பாடுகள் தமிழ் மக்களிடம் புகுத்தப்படும் . ஏற்கனவே ஆரிய பிராமணர்கள்   ஆதிக்கம் செய்யும் தமிழர் கோவில்களில் மேலும் தீவிரமாக பிரமானீய வேதமதம் திணிக்கப்படும் . இதை நாம் ஏற்க இயலாது .

மறைமலை அடிகளார் , தேவநேய பாவாணர் முன்னெடுத்த தமிழர் மதம் மீதும் கட்டி எழுப்பி மீட்கப்படும் போது தமிழகக் கோவில்களை தமிழர் மத அறக்கட்டளையில் நாம் சேர்க்கலாம். அப்போது தமிழர் கோவில்களில் உள்ள பிராமண பூசகர்கள் வெளியேற்றப்பட்டு தமிழ் ஆகமங்களை படித்த தமிழர்கள் பூசகர்களாக நியமிக்கப்படுவர் . தமிழில் மந்திரம் ஓதுவது கட்டாய மாக்கப்படும். தமிழர் பண்பாடுகள் தமிழ் மொழியும் மீட்கப்படும். தமிழர் மத முன்னணி அமையும் வரை தமிழகக் கோவில்கள் ஆரிய மத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் போகாமல் இருக்க நாம் குரல் கொடுப்போம் . 
[vuukle-powerbar-top]

Recent Post