Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் இருக்கிறார். அவர் தெரியாத ஒரு நபரை அழைக்கும் போது கூட  'தமிழரே' என்றே அழைப்பார். நான் அவரிடம் கேட்டேன் , நீங்கள் அழைக்கும் நபர் தமிழராக இல்லாவிட்டால், நீங்கள் கூப்பிடுவது பொருந்தாதே என்று . அவர் உடனே , இருக்கட்டும் அழைக்கப்படும் நபர் தமிழராக இல்லாவிட்டால் அவரே சொல்லி விடுவார் தாம் தமிழர் அல்லவென்று, என்றார் . தமிழர் யார் என்று கண்டுபிடிக்க இதுவும் நல்ல உத்தியாகத் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இது அல்லாமல் சக தமிழர்களை, தமிழ் உணர்வாளர்களை  நாம் எவ்வாறு அழைக்கலாம்?

நம்மைவிட வயதில் மூத்தவர்களை அண்ணன், அக்காவென்றும், வயது குறைந்தவர்களை தம்பி, தங்கை என்றும் அழைக்கலாம். வயதில் அதிகம் மூத்தவர், பெரு மரியாதைக்கு  உரியவர்களை ஐயா, அம்மா என்று அழைக்கலாம். சமமான வயதுடையவர்களை பெயர் சொல்லியே அழைக்கலாம் அல்லது நண்பர், தோழர் என்றும் அழைக்கலாம்.

இருப்பினும் தமிழ்ச் சமூகத்தில் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அம்மா, அப்பா, மாமா, அத்தை, மச்சான், ஐயா போன்ற மதிப்புமிக்க உறவுச் சொல்லாடல்கள் மிகுந்த நெருக்கத்தை, நம்பகத்தன்மையை தருவதாகவே அமையும். கூடிய மட்டும் தோழர், நண்பர் என்பதை குறைத்து உறவுப் பெயர்களையோ நேரடிப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைத்தால் அது சிறப்பான இணக்கத்தை ஏற்படுத்தி தமிழ்த் தேசிய இனத்தை கட்டமைக்க உதவும்.    


[vuukle-powerbar-top]

Recent Post