Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கும் , தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உண்மையில் தமிழர் வானவியல் அடிப்படையில்  டிசம்பர் 22 நாள் மூன்றாம் பிறை அன்று ஞாயிறு தெற்கில் இருந்து வடதிசை திரும்பிய போது தமிழர் புத்தாண்டு தொடங்கி விட்டது. அன்றிலிருந்து 12 நாட்கள் ஆட்டை பெருவிழாவாக சோழர்கள் கொண்டாடி உள்ளனர். ஆகவே தமிழர்களின் புத்தாண்டு 12 நாட்கள் தொடர்கிறது . அந்த பன்னிரண்டு நாட்கள் வரும் ஜனவரி 4 ஆம் தேதி அன்று முடிவடைகிறது. இந்த புத்தாண்டு அறிவிப்பை முறையாக திரு.தென்னன் மெய்மன் (பாரம்பரிய தமிழர் கட்டடக் கலை நிபுணர்)  அவர்கள் தஞ்சையில் வைத்து அறிவித்தார். ஆங்கில நாட்காட்டியும், சமஸ்கிருத நாட்காட்டியும் வானவியலை துல்லியமாக கணக்கிடாமல் புத்தாண்டை அறிவிக்கிறது. இது அறிவியல் பூர்வமான புத்தாண்டு அனுசரிப்பு அல்ல.

தமிழர்களின் வானவியல் என்பது ஒரு ஆண்டில் வரும் முழு நிலவுகளின் அடிப்படையிலும், கதிரவன் வடக்கு நோக்கி திரும்பும் நிகழ்வின் அடிப்படையிலும் தான் கணக்கிடப்படுகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு (winter solstice dec 22) சூரியன் திசை மாறிய டிசம்பர் 22 ஆம் நாளில் தமிழர்களுக்கு தொடங்கியது. ஆங்கில வானவியல் கூறும் குளிர்கால சூரிய திருப்பம் (winter solstice) என்பதும் துல்லியம் அல்ல என்றும் தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.  அதனால் வானவியல் அடிப்படையில் தமிழர்களின் புத்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதியில் தொடங்கி விட்டது என்பதை தமிழ் ஆய்வாளர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

இப்புத்தாண்டில் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பயணிக்க வேண்டும். தமிழகத்தில் தமிழர் ஆட்சியையும், இந்தியாவில் தமிழர்களின் ஆளுமையும் நிலைநிறுத்த நம்மாலான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தமிழியம் சார்ந்த வாழ்வியலை நாம் மீட்டெடுப்போம். தமிழர் பண்பாடு, தமிழ் மொழி, தமிழர் அறிவியல், இயற்கை சார்ந்த தூய்மையான உணவுமுறை, உயிர் நேயம், மனிதரிடையே ஏற்றத் தாழ்வுகளற்ற சமநிலை பேணுதல் என அனைத்து தமிழியக் கூறுகளுடன் இந்த புத்தாண்டில் பயணிப்போம்.  

வாழ்க தமிழ் , வளர்க தமிழர் , சுடர்க தமிழ் நாடே!!  






[vuukle-powerbar-top]

Recent Post