Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சமையல் எரிவாயு உருளைகள் மீதான மானியத்தை பெற எளிய மக்கள் முண்டியடித்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுப்பதை பார்த்தால் பரிதாமாக உள்ளது. 

எரிவாயு நிலையங்கள் , வங்கிகள், மாநகராட்சி அலுவலகங்கள் எங்கும் மக்கள் அலைமோதுகிறார்கள். இதற்கு காரணம் நடுவண் அரசின் கொள்கையே ஆகும். இனி வங்கியில் மானிய பணத்தை கொடுத்து விடுவோம் , நீங்கள் முழுத் தொகையை கட்டி சமையல் எரிவாயு உருளைகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நடுவண் அரசு கூறிவிட்டது. இதனால் எளிய மக்கள் அந்த மானியத்தை பெற வங்கியிலும், சமையல் எரிவாயு முகவர்களிடமும் மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். 

மக்களிடம் சேவைகளை வழங்கத் தான் மாநில அரசுகள் இருக்கிறது . ஆனால் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் 'உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி நடுவண் அரசே நிதியை வழங்குவது ஏற்புடையது அல்ல. எத்தனையோ கூட்டுறவு வங்கிகள், ஊர்புற வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர் இப்போது இந்திய தேசிய வங்கியில் கணக்கு தொடங்கப்படும் நிலைக்கு தலைப்பட்டுள்ளார். வங்கி கணக்கே இல்லாத பல கோடி மக்கள் இப்போது வங்கி கணக்கு தொடங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வங்கியில் சென்று எந்த  படிவங்களையும் பூர்த்தி செய்யவும் இயலாது , காரணம் படிவங்கள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் உள்ளது. இப்படி எல்லா வகையிலும் மக்கள் நலத்திற்கு எதிராகவே செயல்படுகிறது இந்திய அரசு . 

சமையல் எரிவாயு உருளைகள் வாங்க ஏற்கனவே இருந்த திட்டத்தை முறைப்படுத்தினாலே போதுமானது. மாநில சுயாட்சிக்கு எதிரான ஆதார் அட்டை, வங்கிக்கணக்கில் பணம் போன்ற திட்டங்களை மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களான எரிவாயு உருளைகள், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவை முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்ட்டின் கீழ் வரவேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்.  
[vuukle-powerbar-top]

Recent Post