Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மிகப்பெரிய இந்திய தேசிய மனிதக் கொடியை சென்னையில் உருவாக்கப் போகிறார்களாம். அது கின்னஸ் சாதனையாம் அதற்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று தமிழர் அல்லாத நடிகர்கள் பலர் தொலைகாட்சியில் பேசி வருகிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் தான் இப்படி இல்லாத இந்திய தேசிய உணர்வை தூண்டுகிறார்களா ? தந்தி தொலைக்காட்சி 'ஒரே தேசம்' என்று ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல என்று நாமெல்லாம் நரம்பு புடைக்க நமது உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் தமிழக தொலைகாட்சிகள் சத்தமின்றி நமது உரிமைகளை காலில் போட்டு மிதக்கிறது. இல்லாத இந்தியத்தை தமிழர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கிறது. புதிதாக உருவாகியுள்ள நியூஸ் 7 தொலைக்காட்சி, புதிய தலைமுறை, சன் செய்திகள் என முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கே கண்காணி வேலை பார்க்கின்றன. அண்டை மாநிலங்களால், இந்திய அரசின் தவறான கொள்கைகளால் நாம் மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமை, இயற்கை உரிமை என அனைத்து உரிமைகளும் இழந்த நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒரே தேசம், இந்திய தேசம், நாமெல்லாம் இந்தியர்கள் என்று தமிழர்களை மடைமாற்றம் செய்கின்றன இந்த ஊடகங்கள்.

ஒரு தொலைக்காட்சி கூட 'நாம் தமிழர்கள்', நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றது, நமது உரிமைகளை மீட்க வேண்டும், நம் மொழியை, பண்பாட்டை, மண்ணை காப்பாற்ற வேண்டும்  என்ற உண்மையை  சொல்ல மறுக்கின்றது. தமிழர்கள் நாம் விழிப்புடன் இல்லையெனில் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் தமிழர் அடையாளத்தை மிக எளிதாக அழித்துவிட்டு கடந்துவிடும்.



[vuukle-powerbar-top]

Recent Post