Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடியை கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ் திட்டமிடுகிறதா ?

அண்மையில் அக்னி பரீட்சை எந்த நிகழ்ச்சியில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்படும்  எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதாவது வைகோ அவர்கள் ராஜீவ் காந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார் அதன் விளைவாக ராஜீவ் காந்தி தமிழகத்தில் வைத்து கொல்லப்பட்டார் , இப்போது வைகோ மோடியை கடுமையாக விமர்சனம் செய்கிறார் அதனால் மோடியின் உயிருக்கு இங்கு ஆபத்து உள்ளது என்று கூறினார் எச்.ராஜா.

இது உண்மையில் பெரும் எச்சரிகையாகவே பார்க்கப்பட வேண்டியது . ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள கொலைகாரர்கள் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. ராஜீவ் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அவரோடு இல்லை. இந்த கொலையில் சோனியா காந்திக்கும் , சுப்பிரமணியன் சாமிக்கும் தொடர்பு உள்ளதாக பல தகவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை இந்தியாவில் வேரூன்ற வைக்க ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியும் உள்ளது. ராஜீவ் மறைவிற்கு பிறகு தொடர்ந்து காங்கிரஸ் இந்தியாவை ஆண்டு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது எச் ராஜா , மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று பேசியதின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளதாகவே தெரிகிறது . காரணம், இந்தியாவில் பாஜக இனி ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை. மக்கள் பாஜகவின் செயல்பாடுகளை கடந்த ஆறு மாதங்களில் பார்த்துவிட்டு இப்போது நொந்து போயுள்ளனர். இதை அறிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்னும் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை பாஜகவின் ஆட்சியின் கீழ் வைத்தால் அவர்களின் கனவான இந்துத்வா இந்தியாவை முழுமையாக அடைந்துவிடலாம் என்ற நோக்கில் யாரை வேண்டுமானாலும் பலியிட தயாராக உள்ளது. அதற்கு மோடி தான் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது எச் ராஜாவின் பேச்சில் விளங்குகிறது.

மோடியை கொன்று விட்டு பலியை தமிழர்கள் மீது போட்டுவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு கிடைக்கும். தமிழகத்திலும் பாஜக  காலூன்றலாம் , இந்தியாவிலும் ஆட்சியை நெடுங்காலத்திற்கு நிலைக்க வைக்கலாம். இந்த திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எச்.ராஜாவின் மூலமாக செயல்படுத்தத்  தொடங்கி உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன. தேசிய இனங்களை அடக்கி , அவர்கள் மொழியை, இன  அடையாளங்களை முழுமையாக சிதைக்க வேண்டும் என்பதே இந்த இந்திய தேசிய கட்சிகளின் நோக்கமாக உள்ளது . அதனால் தமிழர்கள் எதற்கும் எச்சரிக்கையாகவும் அறிவிப்பூர்வமாக சிந்தித்து செயல்பட  வேண்டும் என்பதே இக்காலத்தின் தேவையான செய்தியாகும்.    
[vuukle-powerbar-top]

Recent Post