Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

400 feet long Thirukural printed work set make a record to mark Thiruvalluvar day 2015

Day : 11/01/2015 Time : 11.30 AM Venue : Behind Thiruvalluvar Statue Marina beach.

We request reporters/ journalists/ editors of news magazines and Television media to come to the venue - Thanks Tamils Cultural Centre  9566224027
 

சென்னை மெரீனா மெரீனா கடற்கரையில் உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியிடப்படுகிறது - பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு !

வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு  வெளிவர உள்ளது. 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள  ப்ளெக்ஸ் பேனர் என்று சொல்லப்படும் பதாகையில் அச்சிட்டு அதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளோம்.  இம்முயற்சி இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகும். திருவள்ளுவர் நாளில்  திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருக்குறளுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டுகிறோம்.  இந்த சாதனை நடந்து முடிந்த பிறகு அடுத்ததடுத்து வரும் திருவள்ளுவர் நாளில் இந்த சாதனையை நாங்களே முறியடிக்க முயற்சி மேற்கொள்வோம்.

திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறளின் பெருமையை இந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்று சேர வேண்டும்.  இந்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். வடநாட்டவர்களுக்கு திருக்குறள் ஒரு பாடமாக கற்பிக்கப்படுதல் வேண்டும். இந்திய ஆட்சியாளர்களும் திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த மொழி இன சமத்துவத்தை பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் வைத்தே இந்த சாதனை முயற்சியை தமிழர் பண்பாட்டு நடுவமும் தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து முன்னெடுக்கின்றன.

தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக ஆசிரியர்கள் , நிருபர்கள் இந்நிகழ்விற்கு நேரில் வந்து செய்தியை பதியுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சி நாள் : ஞாயிறு 11/01/2015 நேரம் காலை 11.30 மணி

இடம் : மெரீனா கடற்கரை வள்ளுவர் சிலை பின்புறம்

தொடர்புக்கு 9566224027

நன்றி

இராஜ்குமார் பழனிசாமி

தமிழர் பண்பாட்டு நடுவம்

சென்னை
[vuukle-powerbar-top]

Recent Post