Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாவீரன் முத்துக்குமரன் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கங்கள் முழங்க எழுச்சியுடன் நடைபெற்றது !! 

2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசும் இந்திய அரசும் இணைந்து நடத்திய போரை தடுத்து நிறுத்த தன்னுடைய இன்னுயிரை தீயிக்கு இரையாக்கிய முத்துக்குமரனுக்கு கொளத்தூரில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, தமிழர் முன்னேற்றக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் என பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் பேரணியாக வந்து வீர வணக்கம் செலுத்தினர். நடிகர் சத்தியராஜ், இயக்குனர் கௌதமன், புகழேந்தி தங்கராஜ் , ஓவியர் வீர சந்தானம், வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன் , அற்புதம் அம்மாள், முத்துக்குமாரின் தந்தை குமரேசன், முத்துகுமாரின் சகோதரி தமிழரசி உள்ளிட்ட பலரும் இந்த வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.
"ஒரே தீர்வு ஒரே தீர்வு தமிழீழமே ஒரே தீர்வு" போன்ற முழக்கங்கள் வைக்கப்பட்டது. இம்முறை இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும் முழக்கங்கள் வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டை காட்டிலும் இம்முறை அதிக அளவில் பொதுமக்களுக்கும் தமிழ் ஆர்வலர்களும் முத்துக்குமரனுக்கு வீர வணக்கம் செலுத்தினர் .  
[vuukle-powerbar-top]

Recent Post