Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாடு அரசு மதசார்பற்ற அரசு என்று நம்புங்கள் !!

//7-வது இந்து ஆன்மிக கண்காட்சி; 300 அரங்குகளுடன் சென்னையில் 3-ந்தேதி தொடங்குகிறது. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகளின் பங்கேற்போடும், இந்தியத் தொல்லியல்துறை மற்றும் 19 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகளோடு, தமிழக அரசின் ஆதரவுடன் கட்டணமில்லா கண்காட்சியாக இது நடக்கிறது.//

ஆரிய இந்து மதத்தை முன்னிறுத்தும் இப்படியான கண்காட்சிக்கு தமிழக அரசு ஏன் ஆதரவு வழங்க வேண்டும்? இந்த கண்காட்சியில் தமிழ் மொழியின் சிறப்பும், தமிழர் மதத்தின், தமிழர் பண்பாட்டின் தொன்மையை விளக்க உள்ளார்களா அல்லது ஆரிய கட்டுக் கதைகளாகிய இராமாயணம் மகாபாரதம் , சமஸ்கிருத புராணங்களை வலியுறுத்தப் போகிறார்களா ? இந்த கட்சியின் கூட்டாளிகள் யாரென்று பார்த்தால் ராமகிருஷ்ணா மிஷன், சின்மயா மிஷன், மாதா அமிர்தானந்தமயி, ஆர்ட் ஆப் லிவிங், சுவாமி நாராயண இயக்கம், பதஞ்சலி யோக பீடம், ஈஷா யோகா, சத்ய சாய் நிறுவனம், சேவா பாரதி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்தியத் தொல்லியல் துறை என்ற செய்தி வருகிறது. இவர்கள் எல்லாம் தமிழையும் தமிழர் வரலாற்றையும் திரிப்பவர்கள். இவர்கள் நடத்தும் கண்காட்சி எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடந்து கொண்டிருக்கிறது . அதற்கு ஆதரவு  தமிழக அரசு தமிழகத்தில் ஆரிய இந்து மத கண்காட்சிக்கு ஆதரவு வழங்குவது வேதனைக்கு உரியது வெட்கப்பட வேண்டியது . நியாயமாக உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழின் தொன்மையை பறைசாற்றி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க தீர்மானம் இயற்ற வேண்டிய தமிழக அரசு இப்போது ஆரியத்திற்கு அடிமையாக வேலை செய்கிறது. தமிழர் மத கூறுகளை , தமிழர் இலக்கியங்களை இந்து மதத்தில் இணைத்து ஒரு பெரும் மோசடி இக்கண்காட்சியில் நடக்கிறது , அதற்கு தமிழக அரசும் ஆதரவு தருவது இழிவானது. ஆரிய இந்து மதத்தின் பிடியில் இருந்து தமிழர் மதத்தை மீட்பது காலத்தின் கட்டாயம் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது.





[vuukle-powerbar-top]

Recent Post