Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாதொருபாகன் - ஆரிய திராவிடக் கருத்தியல் போரில் சிக்கிய தமிழர்கள் !!

ஒரு விடயத்தை ஆரியர்கள் ஆதரித்தால் திராவிடர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள். திராவிடர்கள் ஆதரித்தால் ஆரியர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள். இதில் எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று குழம்புவார்கள் தமிழர்கள். அப்படித் தான் நடந்துள்ளது மாதொருபாகன் நூல் விடயத்திலும்.

இராமாயணம், மகாபாரதம், சமஸ்கிருத புராணங்கள் முதலிய நூல்களை ஏன் தமிழர்கள் எதிர்க்க வேண்டும்? காரணம் அதில் உள்ள அறிவுக்கு , பண்பாட்டிற்கு ஒவ்வாத ஆபாசக் கட்டுக் கதைகளை நாம் ஏற்க இயலாது என்ற காரணத்திற்காகத் தான். இதே நூல்களை தமிழில் தமிழர்களே எழுதியிருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோமா ? நிச்சயம் ஏற்க முடியாது. அறிவுக்கு, மனிதப் பண்பாட்டிற்கு ஒவ்வாத எதையும் நாம் ஏற்க இயலாது. அப்படித் தான் மாதொருபாகன் என்ற நூலின் கதைக்கருவையும் நாம் ஏற்க இயலாது.

இராமாயணம் மகாபாரதம் போன்ற அறிவுக்கு, பண்பாட்டிற்கு  ஒவ்வாத ஒரு ஆபாசக் கதை தான் மாதொருபாகன் கதையும். மகப்பேறு இல்லாத இணையர்கள் மகப்பேறு பெற எந்த எல்லைக்கும் போகலாம், ஒரு இரவில் ஒரு பெண் தான் விரும்பிய எந்த ஆடவனுடனும் புணர்ப்பு நடத்தி குழந்தை பெறலாம் என்ற பண்பாட்டிற்கு, அறிவியலுக்கு, தமிழர் வரலாற்றுக்கு ஒவ்வாத ஒரு கதையை சொல்லி அதை நம்மை ஏற்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

நம்முடைய பண்பாட்டை, வரலாற்றை சிதைப்பதில் ஆரியர் திராவிடர் இருவருக்கும் சம பங்கு உள்ளது. இராமாயணம் மகாபாரதம் போன்ற நூல்களை எதிர்க்கும் திராவிடர்கள் மாதொருபாகன் நூலை ஆதரிப்பதும், ஆரிய ஆபாசக் கதைகளை ஏற்றுக் கொள்ளும் இந்துத்துவா அமைப்புகள் மாதொருபாகன் என்ற ஆபாச நூலை எதிர்ப்பதும்  நகைமுரண். இவர்கள் இருவருக்கும் நடக்கும் கருத்தியல் போரில் தமிழன் தன்னைத் தொலைத்து நிற்கிறான் என்பது மட்டுமே உண்மையாக இருக்கிறது. மாதொருபாகன் கதைக்கருவை நிச்சயம் தமிழர்கள் ஏற்க முடியாது.







[vuukle-powerbar-top]

Recent Post